1. Blogs

ATM கார்டு இல்லாமலே இனி பணம் எடுக்கலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
You can now withdraw money without an ATM card!

ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது இனி சுலபம். அதற்கு நீங்கள் இந்த எளிய வழிமுறைகளை மட்டும் கடைப்பிடித்தால் போதும். இந்த நடைமுறை ATM கார்டு எடுத்துச் செல்லாத சூழ்நிலைகளில் பெரிதும் கைகொடுக்கும்.

ஏடிஎம் கார்டு

இன்றைய மின்னல் வேக இயந்திர வாழ்க்கையில் அவசர வேலையாக நீங்கள் கிளம்பும்போது உங்கள் மனிப்பர்ஸை மறப்பது சகஜமே. அவ்வாறு பர்ஸை மறந்துவிட்டுச் செல்லும் வேளைகளிலும், நீங்கள் ஏடிஎம் கார்டும் இல்லாமல், ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க வழிவகை செய்யும் எளிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில்

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள், ஏடிஎம் நெட்வொர்க், ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் ஆகியவற்றுக்கு நாட்டிலுள்ள அனைத்து ஏடிஎம்களிலும் இயங்கக்கூடிய கார்டு-லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ஐசிசிடபிள்யூ) வசதியை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கார்டு இல்லாமல்

அதன்படி அனைத்து வங்கிகளுக்கும் இந்த வசதி வந்தவுடன் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் ATM களில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.

தற்போது, இந்த கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி (ICICI bank), ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) மற்றும் எஸ்பிஐ வங்கி (SBI Bank) ஆகியவை மட்டுமே வழங்குகின்றன. எனவே அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்குகளிலும் UPI ஐப் பயன்படுத்தி கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

பணம் எடுப்பது எப்படி?

  • முதலில் உங்களின் மொபைல் ஆப் மூலம் service எனும் ஆஃப்சனை கிளிக் செய்து அதில் Cardless Cash withdrawal for Self எனும் ஆஃப்சனை கிளிக் செய்யவும்.

  • அதன்பின் எவ்வளவு தொகை என்பதை உள்ளிட வேண்டும். அடுத்து வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் 4 இலக்க PIN நம்பரை அதில் பதிவு செய்ய வேண்டும்.

  • அனைத்து தகவல்களும் சரியாக இருக்குகிறதா என்பதை செக் செய்து விட்டு பின் ஓகே பட்டனை கிளிக் செய்யவும்.

  • அதன்பின் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஒரு Unique Code வரும்.அதனை பத்திரமாக வைக்கவும்.

  • அதனை அடுத்து அருகிலிருக்கும் உங்கள் வங்கி கணக்கை வைத்திருக்கும் ATM மெஷின் இருக்கும் இடத்திற்குச் செல்லவும்.

  • ATM சென்றவுடன் உங்களுடைய registered மொபைல் நம்பரை பதிவு செய்யவும். அதன்பின் தற்காலிகமாக ஒரு கடவுச் செல்லை உருவாக்கவும்.

  • அதன்பின் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பப்பட்டிருக்கும் Unique Code நம்பரை அதில் உள்ளிடவும்.

  • அதன்பின் நீங்கள் முன்னதாக வங்கி மொபைல் ஆப் பதிவு செய்த தொகையை உள்ளிடவும்.

  • அனைத்து தகவல்களும் சரியானது என உறுதி செய்தவுடன் ATM மெஷினிலிருந்து பணம் எடுக்க முடியும்.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

English Summary: You can now withdraw money without an ATM card! Published on: 07 August 2022, 08:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.