நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிக்க, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இன்னும் கிராமப் பகுதிகளில் எளிய மக்களிடம் போதுமான அளவுக்கு அதிகரிக்கவில்லை.
இதையடுத்து, இப்பகுதிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை (Digital Transaction) அதிகரிக்க உதவும் வகையில், ஆப்லைன் பரிவர்த்தனைக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது.
ஆப்லைன் பரிவர்த்தனை (Offline Transaction)
ஆப்லைன் பரிவர்த்தனை என்பது, இண்டர்நெட் இணைப்பு அல்லது மொபைல் நெட்வொர்க் எதுவும் இல்லாமல், பணத்தை அனுப்பவதற்கான வழியாகும். இந்த ஆப்லைன் பரிமாற்றத்தில், பணத்தை, 'பேஸ் டு பேஸ்' எனும் பிராக்ஸி மோடில் கார்டு, வாலட், மொபைல் போன் போன்றவற்றின் வழியாக அனுப்ப முடியும். இதற்கு, ஓ.டி.பி., எனும் ஒரு முறை கடவுச் சொல் எல்லாம் தேவைப்படாது. ஆன்லைனில் இல்லாமல், ஆப்லைனில் அனுப்புவதால், பரிவர்த்தனை குறித்த குறுஞ்செய்தி எச்சரிக்கை தாமதமாகவே கிடைக்கும்.
அதிகபட்ச தொகை (Maximum Amount)
இந்த ஆப்லைன் சேவை வாயிலாக, அதிகபட்சமாக ஒரு தடவையில் 200 ரூபாய் வரை அனுப்பலாம். இப்படி அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை அனுப்பலாம்.
பேலன்ஸ் இல்லாவிட்டால், மறுபடி ஆன்லைன் வாயிலாக இரண்டாயிரம் ரூபாயை நிரப்பி வைத்துக் கொள்ளலாம். ஆப்லைன் பணப் பரிவர்த்தனைக்கான பரிசோதனை முயற்சிகள், கடந்த 2020 செப்டம்பர் முதல் 2021 ஜூன் வரையிலான காலத்தில் நடத்தப்பட்டு, அதன் பின் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
Share your comments