குஜராத்தில் 1 கிலோ எலுமிச்சை முன் எப்போதும் இல்லாத அளவாக விலையில் இரட்டை சதம் அடித்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சைப்பழம் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குஜராத்தின், ராஜ்கோட் மாவட்டத்தில், அதிக தேவை இருப்பதாலும், வரத்து குறைந்துள்ளதாலும், எலுமிச்சம் பழங்களின் விலை அண்மைகாலமாக கிடுகிடுவென அதிகரித்துஉள்ளது. இதன் உச்சக்கட்டமாக, தற்போது ஒரு கிலோ எலுமிச்சம் பழம், 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள், பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இது குறித்து, ஹிமான்ஷு என்ற நுகர்வோர் கூறியதாவது:
பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளன. எனினும், எலுமிச்சம் பழங்களைப் போல், எதன் விலையும் இவ்வளவு உயரவில்லை. மேலும், 50 - 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ எலுமிச்சைப் பழங்கள், இப்போது, 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இதனால் நடுத்தர மக்களுக்கு தான் பிரச்னை.இவ்வாறு அவர் கூறினார்.வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் எலுமிச்சைப் பழரசம் அதிகம் அருந்துகின்றனர். இந்நிலையில், அதன் விலை உயர்வு, மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
இதேபோல், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், எலுமிச்சைப்பழத்தின் விலைக் கடுமையாக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் ஒரு கிலோ எலுமிச்சைப்பழம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால் இல்லத்தரசிகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கொளுத்தும் கோடை வெயிலுக்கு, எலுமிச்சைப் பழ ஜூஸ், சிறந்த பானம் என்பதால், அனைவரது கவனமும் எலுமிச்சைப் பக்கம் திரும்பியுள்ள நிலையில், இதனைப் பயன்படுத்திக்கொண்டு, வியாபாரிகள் விலை உயர்வை அமல்படுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...
கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!
லட்சம் ரூபாயை எட்டிய பஞ்சு விலை- ஜவுளித்துறை முடங்கும் அபாயம்!
Share your comments