சேலம் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் நீர் பாசனக் கருவிகள் விநியோகம் செய்யப்பட உள்ளதால், கோடை உழவுக்குப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
கூடுதல் உற்பத்தி (Additional production)
சேலம் மாவட்டம், ஓமலூர் வேளாண்மைத் துறை சார்பில் கொரோனாக் காலத்திலும் கூடுதல் வேளாண் விளைப்பொருள்களை உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
33 வருவாய் கிராமங்கள் (33 revenue villages)
இது குறித்து, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நீலாம்பாள் கூறுகையில், ஓமலூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு உள்பட்டு 33 வருவாய் கிராமங்கள் உள்ளன.
உதவிகள் (help)
இக்கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள் கோடை விவசாயத்தை மேற்கொள்ள ஓமலூர் வேளாண்மைத்துறை சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மானியம் (Subsidy)
இந்நிலையில், மானாவாரி மற்றும் இரவை சாகுபடி செய்ய சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நீர்ப்பாசனத் திட்டத்துக்கு அரசு மானியம் வழங்கபட்டு வருகிறது.
மானியத்தில் கருவிகள் (Tools on Subsidy)
தற்போதுள்ள கோடைகால நீரின் பற்றாக்குறையைப் போக்கவும், கோடைகால பயிர்களான நிலக்கடலை, தட்டை பயறு, பாசிபயறு, சோளம் போன்ற பயிர்களுக்கு தெளிப்பு முறையில் நீர் பாசன முறையைப் பயன்படுத்திக்கொள்ள மானியத்தில் கருவிகள் வழங்கப்படுகின்றன.
சொட்டுநீர் பாசனம் (Drip irrigation)
கோடை காலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரின் நீர்த் தேவையைப் போக்குவதற்குச் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன் பெறலாம்.
எவ்வளவு மானியம்? (How much subsidy?)
சொட்டுநீர் பாசனத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.85,000மும், தெளிப்புநீர் பாசனத்துக்கு ரூ.20,000மும், மழை தூவன் வாங்குவதற்கு ரூ,30,000மும் மானியமாக வழங்கப் படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
இந்த நீர்ப்பாசன கருவிகளை மானியத்தில் வாங்குவதற்கு, விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் சிட்டா, பயிர் அடங்கல், சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆதார் அட்டை நகல் முதலிய வற்றை தங்கள் பகுதிக்கு உட்பட்ட உதவி வேளாண்மை அலுவலரிடம் ஒப்படைத்து மானியத்தில் பாசனக் கருவிகளைப் பெற்று பயனடையுமாறு விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
மண் வளம் பெருக்க உதவும் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி!
மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!
மரவள்ளி கிழங்கு சாகுபடியில், மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை!
Share your comments