பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 12-வது தவணைத்தொகை வரும் 17ம் தேதி அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது 12 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் இந்தத் தொகை செலுத்தப்பட உள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளிகளுக்கு அடுத்த கட்ட தொகை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கொடுக்கப்படும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்து, உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
ரூ.6,000
பொருளதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
அதிகாரபூர்வ அறிவிப்பு
ஏற்கனவே 11 தவணைகள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விட்டன. இது குறித்து மத்திய வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பிரதமரின் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 12ஆவது தவணை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. அக்டோபர் 17 மற்றும் 18ம் தேதிகளில், விடுவிக்கப்படும். மொத்தம் 12 கோடி விவசாயிகள் இந்த தொகைக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களின் வங்கிக்கணக்கில் இந்தத் தொகை செலுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் ஆதார் எண் சமர்பித்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும்தான் வழங்கப்பட உள்ளது.
புகார் அளிக்க
எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி, தங்கள் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அதேநேரத்தில், பிரதமர் கிசான் யோஜனா திட்டம் குறித்து அறிந்து கொள்ள கட்டணமில்லா 155261 / 011-24300606 இந்தத் தொலைப்பேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க...
Share your comments