பிரதமரின் கிசான் திட்டத்தில், விவசாயிகள் ஆன்லைனிலேயே e-KYC முடிக்க முடியும். அதனை எவ்வாறு செய்வது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகிறது. இதனை முடிக்க விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது.
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் (Pradhan Mantri Samman Nidhi Yojana) கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு மூன்று தவணைகளாக, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என பிரித்து மொத்தம் 6000 ரூபாய் கிசான் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
காலக்கெடு
எனினும், கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 6000 ரூபாய் பெற வேண்டுமெனில் ஆன்லைனில் e-KYCஐ முடிக்க வேண்டும். e-KYC முடிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்த ப்ரைம் டேவில் டிவிகள் மற்றும் உபகரணங்களை 60% வரை தள்ளுபடி EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகியவை அடங்கும்.
தொடர்புக்கு
விவசாயிகள் அருகே உள்ள பொது சேவை மையங்கள், இ-சேவை மையம் வாயிலாக e-KYC எளிதாக முடித்துக்கொள்ளலாம். இதுபோக நீங்களாகவே ஆன்லைனில் e-KYC முடிக்க முடியும். ஆன்லைனில் ஈசியாக e-KYC முடிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
e-KYC பதிவு செய்ய
-
ஆன்லைனில் eKYC முடிக்க PM-kisan திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
-
அதில் உள்ள Farmers Corner பிரிவில் eKYC தேர்வு செய்யவும்.
-
புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆஹ்டார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.
-
இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும்.
-
OTP பதிவிட்டு Submit கொடுக்கவும்.
-
இத்துடன் உங்கள் eKYC முடிந்துவிடும்.
மேலும் படிக்க...
Share your comments