சாதாரண நாட்களைக் காட்டிலும், பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்களில் பூக்களின் விலை சில மடங்குகள் அதிகரிப்பது வாடிக்கை. ஆனாலும் அண்மைகாலமாக, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பூக்களின் விலை, நடுத்தரவாசிகள் வாங்க முடியாத அளவுக்கு உயர்த்தப்படுகிறது.
கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. ஓணம் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம்.
இதனைக் கருத்தில்கொண்டு, கேரள எல்லையோர தமிழக மாவட்டமான கோவையில், பூக்கள் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. அங்குள்ள ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட்டில்,உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. இந்த பூக்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது.
கேரளா செல்லும் பூக்கள்
கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம். இதற்காக, கோவையில் இருந்து அதிகப்படியான பூக்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் 100 டன்களுக்கு மேலாக பூக்கள் விற்பனையாகும்.
ஆனால், மழையின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்து காணப்பட்டது. ஓணம் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கோவை பூமார்க்கெட்டில் பூக்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை கொள்முதல் செய்து விட்டு செல்கின்றனர்.
அடங்கப்பா
இதனால் பூக்களின் விலை இன்று உயர்ந்து காணப்பட்டது. அதன்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4000, முல்லை ஒரு கிலோ ரூ.1200, ரோஜா ரூ.200, செவ்வந்தி (ஆரஞ்சு) ரூ.200, என விற்பனை செய்யப்பட்டது. தொடர் பண்டிகை நாட்கள் காரணமாக பூக்கள் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் பூ விவசாயிகளுக்கும் இந்த லாபம் சென்றுசேர்வதில்லை.
மக்கள் வாங்குவார்கள் என்பதற்காக, வேண்டுமென்றே விலையை உயர்த்தி லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகளின் தந்திரத்தைத் தவிடு பொடியாக்க அரசு முன்வந்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும் படிக்க...
Share your comments