விவசாயத்தில் எந்திரங்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் டிராக்டர் வாங்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் அம்சங்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறுக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கு நிதியுதவி வழங்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்ல, இதேபோல், இன்னும் பலத் திட்டங்கள் உள்ளன.
விவசாயம் செய்ய எந்திரங்கள் தேவை. குறிப்பாக, அறுவடை போன்ற விஷயங்களுக்கு டிராக்டர் அவசியம். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு டிராக்டர் வாங்க மானியம் வழங்குகிறது.
'பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் இந்த மானிய உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் டிராக்டர்களை வாடகைக்கு எடுப்பது, காளை மாடுகளைப் பயன்படுத்துவது போன்ற சிரமங்கள் குறைந்துள்ளன.
பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தாங்கள் வாங்க விரும்பும் டிராக்டரின் விலையில், பாதித்தொகையைச் செலுத்தினாலே போதும்.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலமாக விவசாயிகள் எந்த நிறுவனத்தின் டிராக்டரையும் 50% ஆஃபர் விலைக்கு வாங்க முடியும்.
எஞ்சியத் தொகையை மத்திய அரசே வழங்குகிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் டிராக்டர் வாங்க மானிய உதவி வழங்குகின்றன. இதனால் விவசாயிகள் தங்களது வேளாண் தொழிலைச் சிறப்பாக நடத்தவும், வருவாய் ஈட்டவும் முடிகிறது. எனவே இத்திட்டம் விவசாயிகளுடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தகுதி
-
இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு 18 முதல் 60 வயது வரையில் இருக்கும் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
-
விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
-
டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்தமாக விவசாய நிலம் இருக்க வேண்டும்.
-
மற்ற மானிய திட்டங்களில் உதவி பெற்றிருக்கக் கூடாது.
நிபந்தனை
முக்கியமான நிபந்தனை என்னவென்றால், விண்ணப்பதாரர் கடந்த ஏழு ஆண்டுகளில் இதேபோல டிராக்டர் எதையும் வாங்கியிருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே டிராக்டருக்கு மானிய உதவி பெற விண்ணப்பிக்க முடியும்.
மேலும் படிக்க...
Share your comments