பல்வகை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு ரூ.7000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அறிவித்துள்ளது.
ரூ.6,000 நிதி (Rs.6,000 fund)
இந்தியாவில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் உதவுவதற்காகவும் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமானது பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டமாகும். இந்தத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 3 தவணைகளாக, ஒரு தவணைக்கு 2,000ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.
அதேபோல, மாநில அரசுகளும் தங்களது விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அப்படி ஒரு அதிரடித் திட்டத்தை ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
தண்ணீர் சேமிப்பு (Water storage)
விவசாயத்துக்கான தண்ணீரைச் சேமிக்கும் நோக்கத்துடன் இந்த ஆண்டுக்கான பயிர் பல்வகைப்படுத்தும் திட்டத்தை ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. ’மேரா பானி-மேரி விராசத் யோஜனா என்ற இந்தத் திட்டத்தின் கீழ், நெல்லுக்குப் பதிலாக நீர் நுகர்வு குறைவாக விதைக்கும் விவசாயிக்கு ஊக்கத் தொகையாக ஏக்கருக்கு 7,000 ரூபாய் வழங்கப்படும்.
காலி நிலத்துக்கு பணம் (Money for vacant land)
நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் அந்த நிலத்தை காலி செய்தாலும் ஏக்கருக்கு 7,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பது இந்தத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இதன்படி, நெல்லுக்கு ஈடாக பருத்தி, நிலவேம்பு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, சோயாபீன், எள், நிலக்கடலை, வெங்காயம், தோட்டக்கலை மற்றும் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பதிவு (Farmers Registration)
இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயம். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, மேரி ஃபசல்-மேரா பயோரா போர்ட்டலில் மேரா பானி-மேரி விராசத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்வது எப்படி? (How to register?)
வரும் ஜூன் 30ஆம் தேதி வரை இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவுசெய்யலாம். வேளாண் வளர்ச்சி அலுவலரால் இதற்கான சரிபார்ப்பு செய்யப்படும். கடந்த ஆண்டு இத்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள், இந்த ஆண்டும் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!
Share your comments