கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் , ஆனைமலை வட்டாரத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் வேளாண் தளவாடங்கள் வாங்க 90 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் இதனை வாங்கிப் பயன்பெறுமாறு வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம் என்கிறார்கள். இந்த விவசாயத்தின் முதுகெலும்பாக கதிர் அரிவாள், கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு சட்டி, கொத்து, மண்வெட்டி உள்ளிட்டத் திகழ்கின்றன. இவைதான் விவசாயிகளுக்கு அன்றாடம் பயன்படும் பொருட்களும் ஆகும். விவசாய பணியில் அன்றாடம் பயன்படுத்தப்படும் கதிர் அரிவாள், கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு சட்டி, கொத்து, மண்வெட்டி ஆகியவற்றை மானிய விலையில் வாங்கும் வாய்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
அதாவது தலா ஒன்று வீதம், சிறு குறு விவசாயிகளுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையம் வாயிலாக மானியத்தில் வழங்கப்படுகிறது. இவற்றின் மதிப்பு, 3,000 ரூபாய் ஆகும்.சிறு, குறு விவசாயிகளில் பொதுப்பிரிவினருக்கு, 75 சதவீத மானியமாக அதாவது, 2,250 ரூபாய்க்கு அளிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் எஸ்.சி., எடி., பிரிவு விவசாயிகளுக்கு, 90 சதவீத மானியமாக, 2,700 ரூபாய் அரசு வழங்குகிறது. மீதமுள்ள தொகை மற்றும் வரியைச் செலுத்தி, விவசாயிகள் தளவாடங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
-
நிலத்தின் சிட்டா
-
ஆதார் அட்டை நகல்
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
-
சிறு, குறு விவசாயிகள் சான்று
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், மேலேக் கூறிய அனைத்து ஆவணங்களுடன், தங்கள் பகுதி வேளாண் அலுவலகத்தை அணுகலாம்.
இதில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்கள் அறிய, தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என, வேளாண் உதவி இயக்குனர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!
Share your comments