கடலுக்கு மீன்பிடிக்கப் படகுகளில் செல்லும் மீனவர்களுக்குப் புயல் காலத்தில் உதவும் சாதனம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்கதை (Continue)
மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் செல்லும் மீனவர்கள், புயல் மற்றும் சூறாவளிக் காற்றில் சிக்கி பலியாவது தொடர்கதையாகி வருகிறது.
அச்சம் இல்லை (No fear)
இருப்பினும் தங்கள் பரம்பரைத் தொழில் என்பதால், இந்தத் தொழில் உள்ள அபாயத்தைக் கருத்தில்கொள்ளாமல், மீனவர்கள் பலரும் கடலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
புதியத் தொழில்நுட்பம் (New technology)
அவ்வாறு கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்குப் புயல் மற்றும் அவசர கால இடர்பாடுகளில் உதவுவதற்காக ஸ்கைலோ டெக்னாலஜிஸ் என்ற இந்திய நிறுவனம், ஸ்கைலோ ஹப் என்ற புதிய மின்னணு தொழில்நுட்ப சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மீனவர் நலத்திட்ட இயக்குனர் கணேஷ் நாக்காவா கூறியதாவது:-
நுண்ணலைக் கதிர்கள் (Microwave rays)
ஸ்கைலோ ஹப் சாதனத்தை மீனவர்கள் படகில் நிறுவினால் போதும். இதில் உள்ள நுண்ணலை கதிர் மூலம் மீனவர்கள் அனுப்பும் தகவல் கரையில் இருப்பவர்களுக்கு வந்து சேரும்.
அவசரத் தகவல் (Emergency information)
தரைக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து படகுகளுக்கு அனுப்பப்படும் அவசரத் தகவல்களும் மீனவர்களை உடனடியாக சென்றடையும்.
மீனவர் வாழ்வு சிறக்காது (Fisher life is not good)
பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்துவந்தப் பழமையான அணுகுமுறையையே இப்போதம் கையாண்டால் மீனவர்கள் வாழ்க்கைத்தரம் சிறக்காது.
புதிய அறிமுகம் (New introduction)
எனவே உலகிலேயே முதல்முறையாக குறுகிய அலைநீளம் கொண்ட நுண்ணலை அடிப்படையிலான இணையத் தொடர்பு மூலம் எந்திரங்களை இயக்கும் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளோம்.
குறைந்த செலவில் (At low cost)
இது நம்பகமானவை, செலவு குறைந்தவை. எனவே இதனை தமிழ்நாட்டில் 600 மீனவ கிராமங்களில் வசிக்கும் 10 லட்சம் மீனவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
உயிரோடு மீட்டது
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி அன்று மகாராஷ்டிர மாநிலத்தில் 7 மீனவர்கள் கடலில் தத்தளித்தபோது, அவர்களை உயிரோடு மீட்ட நிகழ்வில் ‘ஸ்கைலோ’ தொழில்நுட்பம் தனது திறனை நிரூபித்து இருக்கிறது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் மண்புழு உரம்: அதிக செலவில்லாமல் தயாரிப்பது எப்படி?
Share your comments