கொரோனா ஊரடங்கு (Corona Curfew) காலத்தில் விவசாயிகள் வசதிக்காக நடமாடும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாகவே, வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்யப்படும்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடைகள் திறக்க அனுமதி கிடையாது. இந்த நிலையில் விவசாய பணிகள் சுணக்கமின்றி நடைபெறவும், விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் (Agri Inputs) தடையின்றி கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம், விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.
நடமாடும் வாகனம்
அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனரகம் மூலம் வழங்கப்படும் அனுமதி சீட்டினை பெற்று நடமாடும் வாகனத்தின் மூலமாக, விவசாயிகள் இருக்கும் இடத்திலேயே உரம் மற்றும் பூச்சி மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போடி அருகே உள்ள பத்ரகாளிபுரம் கிராமத்தில் நடமாடும் வேளாண் இடுபொருள் விற்பனை வாகனத்தை நேற்று தேனி வேளாண்மை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் விவசாயிகள், வேளாண்மை உதவி இயக்குனர் வழங்கிய அனுமதி சீட்டின் மூலம் உரங்கள் மற்றும் மருந்துகளை வாங்கி சென்றனர். அப்போது வேளாண் உதவி இயக்குனர்கள் மணிகண்டன், தெய்வேந்திரன் ஆகிேயார் உடனிருந்தனர்.
மேலும் படிக்க
காய்கறி, பழங்களை முழு ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு
கொரோனா ஊரடங்கால் செடியிலேயே வீணாகும் வெள்ளரிப்பிஞ்சு! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
Share your comments