தென்னை மரம் ஏறுபவர்களுக்கும் மற்றும் பதனீர் இறக்கும் கலைஞர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலானக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. எனவே இந்தப்பணியில் ஈடுபட்டிருப்போர் தவறாமல் காப்பீடு செய்துகொள்ளுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தென்னை விவசாயம் (Coconut farming)
விவசாயத்தில் தென்னை விவசாயம் மிகவும் முக்கியமானது. தென்னந்தோப்புகளில் பல அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கும் தென்னை மரங்களில் இருந்து தேங்காயைப் பறிக்கும் பணியில், தென்னை மரம் ஏறுபவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இதற்கென இவர்கள் பிரத்யேகப் பயிற்சியும் எடுத்துக்கொள்கிறார்கள். மிக உயரமான மரங்களில், தங்கள் உயிரைப் பணையம் வைத்துக்கொண்டுதான் ஏறிக் காய் பறிக்கிறார்கள்.
எதிர்பாராத விபத்து (Unexpected accident)
அவ்வாறு ஏறும்போது, எதிர்பாராதவிதமாகக் கீழே விழ நேர்ந்தால், சில வேளைகளில் உயிர்போகும். அல்லது உடல் ஊனம் ஏற்பட்டு வாழ்க்கையேக் கேள்விக்குறியாகும். இதேநிலைதான் பதனீர் இறக்குவோருக்கும்.
விபத்துக் காப்பீடு (Accident insurance)
எனவே இத்தகையோரின் நலன்கருதி, கூடுதல் 'கேரா சுரக்ஷ' காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளர்ச்சி வாரியம் அமல்படுத்தி உள்ளது.
-
மாற்றியமைக்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மீதிப்பு ரூ.5 லட்சம். இது விபத்துக் காப்பீடு பாலிசி.
-
இதில் ரூ.1 லட்சம் வரை மருத்துவமனைக் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்.
-
ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் மூலம் இந்தத் திட்டம் அமல்படுத்தப் படுகிறது.
பிரீமியம் தொகை (Amount of premium)
தென்னை மர நண்பர்கள் பயிற்சித் திட்டம், பதனீர் இறக்கும் கலைஞர்கள் பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் முதலாண்டு பிரீமியம் தொகை ரூ.398.65ஐ தென்னை வளர்ச்சி வாரியம் ஏற்கும்.
ஓராண்டு முடிந்ததும் பிரீமியம் தொகையில் 25 சதவீதம் ரூ.99ஐ செலுத்தி பாலிசியை பயனாளிகள் புதுப்பித்துக் கொள்ளலாம். தொகையில் 25 சதவீதம் ரூ.998 செலுத்தி பாலிசியை பயனாளிகள் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணைவது எப்படி?
18 வயது முதல் 65 வயது வரையுள்ள தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறலாம்.
இதற்கான விண்ணப்பத்தை வேளாண் அதிகாரி, இயக்குனர்கள் ஆகியோர் கையெழுத்தைப் பெற்று பஞ்சாயத்துத் தலைவர், சிபிஃஎப் அலுவலக அதிகாரிகள், சிபிசி எர்ணாகுளத்தில் மாற்றும் வகையில் ரூ.99 மதிப்புள்ள டிடி தென்னை வளர்ச்சி வாரியத்திற்கு அனுப்ப வேண்டும்.
இதன் மூலம் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம் என கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பத்தை www.coconut board.gov.in. என்ற இணைய தளத்தில் இருந்தும் download செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க...
உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக வாழ, இந்த பானத்தை ட்ரை செய்தீர்களா?
Share your comments