அழிவின் விளிம்பில் உள்ள மாநில மரமான பனையை காக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பனை விதைகளை (Palm Seed) அதிகளவில் நடவு செய்து, அதன் பயன்களை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தவும், பனை வாரியத்தின் செயல்பாடுகளை முடுக்கி விடவும் வலியுறுத்தி உள்ளனர்.
பனை மரங்களை காக்க விழிப்புணர்வு ஆவடி, அண்ணனுார் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா காந்தி, 40; வழக்கறிஞர். மாநில மரமான பனை மரத்தை காக்க, மூன்று ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 'பனையெனும் கற்பகத்தரு' என்ற அறக்கட்டளை வாயிலாக இளைஞர்கள், சினிமா பிரபலங்கள் என, அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தொடர்ந்து செய்கிறார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: 'பனையெனும் கற்பகத்தரு' அறக்கட்டளையை உருவாக்கி, பனை மரம், அது சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க, அரசை வலியுறுத்தி வருகிறேன்.
6,000 பனை விதை
இதுவரை இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைத்து தமிழகம் முழுதும், 6,000 பனை விதைகளை நடவு செய்திருக்கிறோம். தமிழகத்தின் பல இடங்களில், பனை ஏறும் தொழிலாளிகள் மீது, வழக்கு பதிவு செய்யும் அவலம் தொடர்கிறது. கலசம் ஏற்றினாலே போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரைக் கொல்லும் மது வகைகளுக்கு அனுமதி இருக்கும் போது, கள் இறக்க அனுமதிக்கவில்லை. தற்போது தமிழகத்தில் எத்தனை பனை மரங்கள் இருக்கின்றன என்ற கணக்கீடு அரசிடம் இல்லை.
பெயரளவில் பனை வாரியம் செயல்படுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள பனை மரங்களை காக்க, நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இதை தடுக்க, அரசு அலுவலகங்களில் பனை மரக்கன்றை நட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செயல்பட்டு வருகிறேன். 2 கோடியை நெருங்கும் முல்லைவனம் நான் 13 வயது முதல் மரக்கன்றுகள் நட்டு வருகிறேன். தினமும் மரம் நடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். கடந்த, 39 ஆண்டுகளில், 1 கோடியே, 39 லட்சம் மரக் கன்றுகளை நட்டுள்ளேன். கடந்த, 2011ல் மரக்கன்று வங்கி அறக்கட்டளை என்ற அமைப்பை துவங்கி, மக்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறேன்.
மரக்கன்று சேவை
விருகம்பாக்கம், ஏ.வி.எம்., காலனியில் உள்ள நுாலகம் அருகே, 1978ல் நான் நட்ட மரம் இன்றும் உள்ளது. நடமாடும் மரக்கன்று சேவை ஊர்தி வாயிலாக, நாடு முழுதும் சென்று மரக்கன்றுகள் நட்டு வருகிறோம்.
இந்த ஆண்டு ஆக., 2ம் தேதி, 30 ஆயிரம் மரக்கன்றுகளுடன், யாத்திரை புறப்பட்டோம். இதில், ராமேஸ்வரம், ராம்நாடு, பரமக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு விட்டு, 13ம் தேதி சென்னை திரும்பினோம். அரசியல்வாதிகளுக்கு மட்டும் மரக்கன்றுகள் வழங்குவதில்லை. அவர்கள், 1,000 கன்றுகளை எடுத்து சென்று விட்டு, ஒரு மரக்கன்று நட்டு புகைப்படம் எடுப்பர். பின், அந்த மரக்கன்றுகள் பராமரிப்பின்றி வீணாகின்றன. முல்லைவனம், 54, விருகம்பாக்கம்சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைவரின் கடமை!எங்கள் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம், கொரட்டூரில், 11 நிர்வாகிகள், 20 உறுப்பினர்களுடன், 2016 முதல் இயங்கி வருகிறது. 'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கு ஏற்ப, நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவும், கொரட்டூர் ஏரியில் கழிவு நீர் பாய்வதை தடுக்க, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்.
தவிர, ஏரிக்கரையை பராமரித்தல், அதில் மரக்கன்று மற்றும் பனை விதைகளை நடவு செய்தல், ஏரி ஆக்கிரமிப்புகளை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியை சட்ட ஆலோசனை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அனுமதியுடன் தொடர்ந்து வருகிறோம். தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பலரையும் ஒருங்கிணைத்து, நீர்நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில், அவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆண்டுதோறும், ஜனவரியில், ஏரி பொங்கல் விழா நடத்தி, அதில், மரபு வழி விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களிடம் சுற்றுச்சூழலின் அவசியத்தை பதிவு செய்கிறோம்.
2019ல், கொரட்டூர் ஏரியின் நடுவில், வேம்பு திட்டு, குருவி திட்டு என, இரு பசுமை திட்டுகளை அமைத்தோம். தற்போது, 52 வார ஏரி துாய்மை பணியை செய்து வருகிறோம். ஏரிக்குள் கிடக்கும் பிளாஸ்டிக், ரப்பர் குப்பை கழிவுகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றி வருகிறோம். இந்த பணியில், மாணவ - மாணவியர், பெண்கள் என பலரும் பங்கேற்கின்றனர். இதுவரை, 11 வார பணி முடிந்து உள்ளது. இப்பணிக்கு முதல் நாள் காலை, வாட்ஸ் ஆப் குழுவில், மறுநாள் துாய்மை பணி நடக்கும் இடம், நேரம், தொடர்புக்கான குழுவின் மொபைல் எண் ஆகியவற்றை பதிவிடுவோம். இன்றைய நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகிறது.
சு.சேகரன்,
51, செயலர்,
கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம்
மேலும் படிக்க
Share your comments