தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலைக்கழகம் (Agricultural University)
கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியலை மக்களிடையேக் கொண்டுசெல்வதில், முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இங்கு மாணவர்கள் வேளாண் கல்வி பயில ஏதுவாக, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
விதை ரகங்கள் (Seed varieties)
இதுமட்டுமல்லாமல், விவசாயம் சார்ந்த அனைத்து ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, அதிக மகசூல் பெற்று கூடுதல் வருமானம் ஈட்ட விவசாயிகளுக்கு விதை ரகங்கள் வழங்கப்படுவதுடன், அவ்வப்போது, பருவநிலைக்கு ஏற்ற ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், விவசாயத்திற்குத் தேவையான இயற்கை உரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
முன்னோடி விவசாயிகளை உருவாக்கும் வகையில், அவ்வப்போது பயிற்சிகளும் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த 5 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
யாருக்கு பயிற்சி (Training for whom)
வரும் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பயிற்சியில், வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.
இதில் விவசாயிகள், பெண்கள், இறுதியாண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்துகொண்டுப் பயனடையலாம்.பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கத்தில் நடைபெறுகிறது.
பயிற்சிக் கட்டணம் (Tuition fees)
பயிற்சிக் கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.10,000 மற்றும GST(18%) சேர்த்து 11,800ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த இடங்கள் (20) மட்டுமே உள்ளன. மேலும் பதிவுக்கு busieness@tnau.ac.in, eximabdtnau@gmail.com என்ற மின்னஞ்சலையும், 0422-6611310 என்றத் தொலைப்பேசி எண்ணையும், 9500476626 என்றக் கைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
விவசாயம்: 50 ஆயிரம் முதலீடு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கவும்
ஒரு கிலோ ரூ. 5000- த்திற்கு!!!மருத்துவத் தாவரம்! சிவப்பு கற்றாழை!!!
Share your comments