இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் தற்போது இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறுது. குறிப்பாக இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதாவது, ஆரோக்கியத்திற்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பதை உணர்ந்த இளைஞர்கள் சிலர், இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சாதனை படைத்து வருகின்றனர்.
இதற்கு உதவும் வகையில், தமிழக அரசின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்படி, முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1997கிராம பஞ்சாயத்துகளிலிருந்து 193 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அவர்கள் வேளாண்,தோட்டக்கலை,வேளாண் பொறியியல் படித்த பட்டதாரிகளாக இருப்பது அவசியம். அவ்வாறுத் தேர்வு செய்ய பட்டு அவர்கள் புதிய தொழில் முனைவோருக்காக 10 லட்சம் நிதி உதவி அளிக்க இந்த திட்டத்தில் வழி வகைசெய்யப் பட்டு அதற்காக 1.93 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
அக்ரி கிளினிக் (Establishment of agri clinic)
மண் வளம், பயிர்நலம், பயிர் உற்பத்தி தொழில்நுட்ப ஆலோசனை வழங்குதல், மண்மற்றும் நீர் பரிசோதனை செய்தல்
வேளாண் சார்ந்த தொழில் தொடங்குதல்( Establishment of agri business activities).
நாற்று பண்ணை அமைத்தல், நர்சரி அமைத்தல்,நுண்ணூட்ட உரம் தயாரித்தல், உயிர் உரங்கள் உற்பத்திநிலையம் அமைத்தல்
உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை நிலையம் அமைத்தல்
பயனாளிகள்தேர்வு
-
பொது பிரிவினர் 80 சதவீதத்தினர்
-
பட்டியியல் வகுப்பினர்19%
-
பழங்குடியினர்1%
-
பெண் பயனாளிகள்30 சதவிகிதம்
-
என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
-
தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட்டுள்ளன
இந்த அரிய வாய்பைப் படித்த பட்டதாரிகள் பயன்படுத்தி தாங்களும் உயர்ந்து மற்ற வர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவர்களாக மாறலாம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
Share your comments