விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு குறித்து தங்களின் கருத்துக்கள், அறிவுரைகளை தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டிய வழிகள், முதல் வழி உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம்.
கடிதம் மூலம் தெரிவிப்பதற்கான முகவரி:
வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர்,
வேளாண்மை (ம) உழவர் நலத்துறை,
தலைமைச் செயலகம்,
புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை – 600 009.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மிளகாய் வற்றலுக்கான விலை முன்னிறிவிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, மிளகாய் வற்றலுக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. உலகளவில், மிளகாய் வற்றல் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதன்மையாக திகழ்கிறது. இந்திய மிளகாயின் நிறம் மற்றும் காரத்தன்மை ஆகிய வணிக பன்புகளுக்காக உலகப் புகழ் பெற்றது. தமிழகத்தில் 2021-22ம் ஆண்டில் 0.54 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 0.24 லட்சம் டன் மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டது. எனவே, ஆய்வுகளின் அடிப்படையில், அறுவடையின் போது தரமான சன்னம் ரக மிளகாய் வற்றலின் சராசரி பண்ணை விலை குவிண்டாலிற்கு ரூ.180 முதல் ரூ.200 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் அணுகவும்.
திருவாரூரில் உள்ள நெல் சேமிப்பு நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக அதிக அளவில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.
வீட்டு உபயோகப்பொருட்கள் செய்முறை பயிற்சி
வீட்டு உபயோகப்பொருட்கள் செய்முறை பயிற்சி இல்லத்தரசிகள் வீட்டியிலிருந்தே வருமானம் பெற வழி வகுக்கும் பயிற்சி வந்தவாசியில், வழங்குபவர் முனைவர்.திருமதி யமுனா தேவி, இளம் தொழில் முனைஞர். இந்த பயிற்சி வரும் சனிக்கிழமை 25 பிப்ரவரி 2023 காலை 9 மணி முதல் 5 மணி வரை ஸ்ரேயா கால்நடை மற்றும் இயற்கை பண்ணை, சித்திரகவூர் கிராமம், வந்தவாசி. முன் பதிவு அவசியம், எனவே, பயிற்சியில் கலந்து கொள்ள 8300093777, 9442590077, பயிற்சி கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும்.
"உத்கல் விவசாய கண்காட்சி 2023" 2ம் நாளும் பங்கேற்கும் விவசாய பெருமக்கள்
க்ரிஷி ஜாக்ரான் பங்களிப்புடன் ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் பர்லகேமுண்டி பகுதியிலுள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் ”உட்கல் க்ரிஷி மேளா -2023” நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெற்று வந்த, இக்கண்காட்சியில் விவசாயம் மற்றும் விவசாய மேம்பாடு குறித்தும் இங்கு நடைபெறும் நிகழ்ச்சி குறித்தும் சிறப்பு கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. ஆயிரக்கணக்கான விவசாயிகள் சகோதர சகோதரிகள் கூடுவார்கள். இந்த விவசாய கண்காட்சியின் முக்கிய நோக்கம் விவசாயிகள், விவசாய தொழில்முனைவோர், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல அரசு அமைப்புகள் சந்திக்கும் இடத்தை வழங்குவதாகும். இதன் மூலம் அங்குள்ள விவசாயிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பயன்பெறுவார்கள்.
அம்பாசமுத்திரம் பகுதியில் 7 கோடி மதிப்பில் உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம்
அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் உருவாக்க தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பூங்காவுடன் கூடிய உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான முக்கிய நோக்கம் தென்மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதியில் உள்ள ஆசிய யானைகள் மற்றும் புலிகளின் எண்ணிக்கையை பராமரிப்பதே ஆகும் எனவும் அரசாணை குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 7 கோடி செலவில் களக்காடு முண்டந்துறை பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
கலைப்பொருட்கள் தயாரிக்க மார்ச் 23 இலவச பயிற்சி|ட்ரோன் மூலம் பூச்சி மேலாண்மை| கலைஞர் நுலகம்
வேளாண் மாணவிகள் பஞ்சகவ்யா, சிறுதானிய ஆண்டு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share your comments