1. விவசாய தகவல்கள்

Agromet Bulletin- திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான ஆலோசனை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

Agromet Bulletin based advice for farmers of Trichy district

திருச்சி மாவட்டத்தில் அடுத்த சில தினங்கள் நிலவும் வானிலை மற்றும் அதற்கேற்ப விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து அக்ரோமெட் ஆலோசனை வழங்கியுள்ளது. அதன்படி 18.9.2023 (நேற்று) முதல் 26 ஆம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பு மற்றும் விவசாயிகளுக்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

இந்த வாரத்தில் 5 நாள் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சராசரி ஈரப்பதம் (காலை மற்றும் மாலை), அதிகப்பட்ச வெப்பநிலை மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை முறையே 35 டிகிரி செல்சியஸ் மற்றும் 23 டிகிரி செல்சியஸ் இருக்கும். காற்றின் வேகம் சராசரியாக மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

விவசாயிகளுக்கான ஆலோசனை: தென்னையில் குரும்பை கொட்டுதலை தவிர்ப்பதற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு பாக்கெட் தென்னை டானிக்கை 200 மி.லி வேர் மூலம் கொடுக்க வேண்டும். தென்னை டானிக் (ரூ.310/ லிட்டர்)

பயிர் தொடர்பான ஆலோசனை:

நெல்: நிலவும் வானிலை காலநிலை காரணமாக நாற்றங்காலில் நெற்பயிரில் பச்சை இலைப்புழு தாக்குதல் ஏற்படலாம். தாக்குதலைக் கட்டுப்படுத்த பாஸ்பாமிடான் 40 எஸ்எல் 50 மீ தெளிக்கவும்.

சூரியகாந்தி: தற்போதுள்ள நிலை காரணமாக வாடல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கட்டுப்படுத்த கேப்டான் அல்லது கார்பாக்சின் 3 கிராம்/கிலோ மூலம் விதை நேர்த்தி செய்து செடியின் அடிப்பகுதியை கார்பன்டாசிம் | கிராம்/ லிட்டுடன் நனைக்க வேண்டும். நிலக்கடலையில் நிலவும் வானிலை காரணமாக இலைப்புள்ளி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கட்டுப்படுத்த, 10% கலோட்ரோபிஸ் இலை சாற்றை தெளிக்கவும்.

தோட்டக்கலை தொடர்பான ஆலோசனை:

வெங்காயம்: தற்போதுள்ள நிலையில் வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கட்டுப்படுத்த. பூச்சிக்கொல்லிகளை - ப்ரோஃபெனோஃபோஸ் @ 0.05% தெளிக்கவும்.

உயிருள்ள விலங்குகள் தொடர்பான ஆலோசனை:

பசு: கறவை மாடுகளில் மடிவீக்க நோயை கட்டுப்படுத்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு பால் மடியை கறப்பதற்கு முன்பும் பின்பும் சுத்தம் செய்யவும்.

கோழிப்பண்ணை: ஒருங்கிணைந்த முறையில் வளர்க்கப்படும் கோழிகளில் பேன் போன்ற புற ஒட்டுண்ணிகள் இருந்தால் ப்யூடாக்ஸ் (1 லி நீரில் 1 மி.லி ப்யூடாக்ஸ் கரைசலை) பஞ்சில் நனைத்துத் கண், செவி மடலில் படாதவாறு சூரிய ஒளி மிக்க நாளில் தடவி விட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட ஆலோசனை மற்றும் வழிமுறைகளை கடைப்பிடித்து பயிர்கள், கால்நடைகள் ஆகியவற்றை நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுக்காக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தகவல்கள் கிராமின் கிருஷி மவுசம் சேவா மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலா? மறக்காம இதை செய்யுங்க

3 வருட FD போடுறீங்களா- எந்த பேங்க்ல நல்ல வட்டித் தெரியுமா?

English Summary: Agromet Bulletin based advice for farmers of Trichy district

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.