தமிழகம் முழுவதும் குறுவை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆடிப்பட்டத்தில் தேடி விதைக்கத் தயாராகி வருகின்றனர் விவசாயிகள். இந்தச்சூழலில், நெற்பயிருக்கு இடையூறாக உள்ள பாசிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து தெரிந்து கொள்வது, விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இடு பொருட்கள்
டெல்டா மாவட்ட பகுதியில் கடந்த ஆண்டைவிட மும்முரமாக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.வேளாண்மை துறை வழங்கும் குறுவை சாகுபடிக்கான இடு பொருட்களை பெற்று சாகுபடி பணி தீவிரமாக நடக்கின்றன.
பாசி படர்ந்து
இதே நேரத்தில் ஒருசில இடங்களில் நெல் நாற்று நட்ட வயலில் பாசி படர்ந்து வளர்ந்து பச்சை போர்வை போன்று காணப்படுகின்றன.
2 வகை
பாசிகள் இருவகைபடும். முதலாவது நீர்பாசி. இது ஸ்பைரோகைரா என்ற சிற்றின வகையை சார்ந்தது. இரண்டாவது சன்டி. இது சாரா சிற்றினமாகும்
இவை நடவு செய்யப்பட்ட 10முதல் 15 தினங்களில் வயல் முழுமையாக பரவி அடர்ந்து காணப்படும். நெல்லுக்கு இடும் தழைசத்து உறிஞ்சி உட்கொண்டு வளரும் ஆற்றல் இந்த பாசிகளுக்கு உண்டு.
தடையாக
இவை பயிரின் வேர்வளர்ச்சி தடைசெய்து பயிர் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் கருகி விடும். பயிரின் காற்றோட்டத்தை தடைசெய்யும் இவை நன்மை செய்யும் பாசிகள் கிடையாது.
தடுப்புமுறைகள்
-
காய்ச்சல்,பாய்ச்சல் முறையில் நீர்ப்பாசன மேற்கொள்ள வேண்டும் ( " நீர் மறைய நீர்கட்டு நிறைய வரும் நெல்கட்டு") என்பது பழமொழி.
-
ஒரு ஏக்கருக்கு 1கிலோ மயில் துத்தம் ( காப்பர் சல்பேட்) நன்கு பொடி செய்து, 10 கிலோ மணலுடன் கலந்து, சாக்கு பையில் இட்டு தண்ணீர் பாயும் நிலத்தின் வாய்மடையில் வைத்து, நீர்ப்பாசனத்தை மேற்கொள்ள வேண்டும்.
-
வயலில் நீரை வடிகட்டிய பிறகு, 0.5சதவீத மயில்துத்தக்கரைசலை(5 கிராம்/ 1 லிட்டர் தண்ணிரில் கலந்து) நாற்று நட்ட 10 நாளுக்குள் ஒருமுறையும், பிறகு 10நாட்கள் இடை வெளியில் தெளிக்க வேண்டும்
-
பாசிகளை சுரண்டியும் அப்புறப்படுத்தலாம்
மேற்கண்ட முறைகளை முறையாகக் கையாண்டால், பாசிகளைக் களைந்து விட முடியும். அதேநேரத்தில் அதிக மகசூலும் பெறலாம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
Share your comments