எல்லா சந்தேகங்களுக்கும் இயற்கை விவசாயத்தில் பதில் கொடுத்துள்ளனர். குறிப்பாக நம் முன்னோர்கள் வேளாண் குறித்த முழு தகவல்களையும் நமக்கு விட்டுச் சென்று உள்ளனர். அவர்களது அனுபவமே நமக்கு கிடைத்த பொக்கிஷம். இங்கே குறிப்பிட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
எளிய விவசாய குறிப்புகள்
கோரை புல் தொந்தரவா?
கோரை புல் அதிகம் வளர்ந்திருந்தால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை அடர்த்தியாக சோளம் விதைத்தால், முற்றிலுமாக குறைந்து விடும்.
மாட்டு கோமியம்
இயற்கை விவசாயத்தில் யூரியாவிற்கு பதில் கோமியத்தை பயன்படுத்தினால் இயற்கை வழியில் அதிக செலவு செய்யாமல் மண்ணின் ஆரோக்கியத்தையும், பொருளாதாரத்தையும் நம்மால் காக்க முடியும்.
ஜீவாமிர்தம் அமுதகரைசல்
பொதுவாக மானாவாரி மற்றும் இறவை பயிர்களுக்கு, ரசாயன கலவையான டிஏபி பயன்படுத்துவார்கள். இதற்கு மாற்றாக ஜீவாமிர்தம் என்னும் அமுத கரைசலை பயன்படுத்தலாம்.
மண்புழு உரம்
மண் சுவாசிக்க உதவும் முக்கிய நண்பன் மண்புழு. நிலத்தில் மூன்று வகை மண்புழுக்கள் உள்ளன. மேல் மட்டும், நடு மட்டம், அடி மட்டம் மூன்று வகை மண்புழுக்கள் அடி ஆழத்தில் மண்ணில் இருக்கும் சத்துக்களை மேலே எடுத்து மண்ணுக்கு தேவையான சத்துக்களை தர வல்லது.
பயிர் சுழற்சி
நெல் விதைத்த பூமியில் உளுந்தும், சோளம் விதைத்த பூமியில் மஞ்சளும், கம்பு விதைத்த பூமியில் வாழை நடவு செய்து பாருங்கள், நல்ல மகசூல் கிடைக்கும். அதே போல் கம்பு போட்ட வயலில் கடலையும், கடலை போட்ட வயலில் கம்பும் பயிரிட்டால் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
கல் உப்பு
பார்த்தீனியா என்னும் விசச்செடியின் ஒரு பூவிலிருந்து ஆயிரக்கணக்கான விதைகள் காற்றில் மூலம் பரவி கால் நூற்றாண்டு வரை நீடித்து இருக்கும். இதற்கு உபாயமாக பத்து லிட்டர் தண்ணீரில் ஐந்து கிலோ கல் உப்பை கரைத்து பூ பிடித்திருக்கும் பார்த்தீனிய செடி மீது தெளித்தால் அது முற்றிலும் கருகிவிடுவதுடன் அதனுடைய விதைகளும் வீரியம் இல்லாமல் போய்விடுகிறது.
அடுப்பு சாம்பல்
தாவரங்களுக்கு தழை சத்து, மணிச்சத்து போன்று சாம்பல்சத்தும் இன்றியமையாதது. இதற்கு பொட்டாசியம் எனப்படும் ரசாயன கலவையை பயன்படுத்துவதற்கு பதில் அடுப்பு சாம்பல் பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
வேப்ப எண்ணெய் / புங்க எண்ணெய்
இயற்கை வேளாண்மையில் ஒவ்வொரு உயிரினமும் எதோ ஒரு வகையில் தாவர வளர்ச்சிக்கு உதவுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.இருப்பினும் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் பூச்சிகளை அளிப்பதற்கு பதிலாக இயற்கை பூச்சி விரட்டியான வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய் பயன் படுத்தலாம்.
கொழுஞ்சி விதைப்பு
கோடை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்க கொழிஞ்சியை அந்நாளில் விதைத்து விடுவர்.இது ஒரு சிறந்த பசுந்தாள் உரமாகும். கடும் வறட்சியிலும் தாக்குப்பிடித்து வளரும் தன்மை கொண்டது.
தேன் கூடு
தாவரங்களில் மகரந்தசேர்க்கைக்கு நடை பெற தோட்டங்களில் தேனீ வளர்ப்பு செய்யலாம்.
மேலே குறிப்பிட்ட வேளாண் குறிப்புகள் யாவும் இயற்கை விவசாயத்தை நாடுவோருக்கு உதவியாகவும், சிக்கனமானதாகவும் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்....
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments