விவசாயிகள் வேளாண் பணிகளோடு, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதில் முழு கவனம் செலுத்தினால் அதிக வருமானம் ஈட்டலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
மண்ணிற்கு ஆரோக்கியம் (Soil health)
விவசாயத்தில் வேளாண் பணிகளோடு நின்றுவிடாமல், அவ்வப்போது, சார்பு வருமானம் தரும் பண்ணைக்குட்டைகள் அமைத்தல், கால்நடைகளை வளர்த்தல், உரங்கள் தயாரித்தல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்துக்கொள்வது மண்ணின் ஆரோக்கியத்திற்கும், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.
ஆட்சியர் ஆய்வு (Collector inspection)
சிவகங்கை அருகே கீழப்பட்டமங்கலம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் வேளாண் பொறியியல் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ஆட்சியர் பி. மதுசூதன் கூறியதாவது:
இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் வேளாண் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனா்.
தற்போது மத்திய, மாநில அரசுகள் சார்பில், வேளாண் பணிகள் மட்டுமல்லாமல், அதோடு தொடா்புடைய தொழிலான கால்நடை வளா்ப்பு, பண்ணைக் குட்டை அமைத்து மீன் வளா்த்தல், தேனீ வளா்ப்பு, மரக்கன்றுகள் நடவு செய்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்துக்கும் அதிகளவிலான மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பண்ணைக்குட்டைகள் (Farms)
அந்த வகையில், வேளாண் பொறியியல் துறை மூலம் நடப்பாண்டில் 55 விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தோட்டக்கலைத் துறை சாா்பில் இதுவரை 25 விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
மானியத்தில் மீன் குஞ்சுகள் (Fish on subsidy)
இத்திட்டத்தின் ஒருபகுதியாக மீன் வளா்ப்புத் துறையின் மூலம் முழு மானியத்தில் மீன் குஞ்சுகள் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பண்ணையம் (Integrated Farm)
விவசாயிகள் வேளாண் பணியோடு பண்ணைக்குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதில் முழு கவனம் செலுத்தினால் அதிக வருமானம் ஈட்டலாம் என்றாா். இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க...
தரிசு நிலத்தை விளைநிலமாக்கி சாகுபடி செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு மானியம் கிடைக்கும்!
பூச்சிமருந்து மற்றும் பூஞ்சான மருந்துகள் பாதுகாப்பு மசோதா - ஒரு பார்வை!
Share your comments