அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நிரம்பிய நீர்நிலைகள் (Filled waters)
இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் தொடங்கிக் கொட்டி தீர்த்ததுடன் டிசம்பர் மாதத்திலும் தொடர்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பின. பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
132%க்கு மேல்
தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 132%-க்கு மேல் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை (Moderate rain)
ஏற்கனவே அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று நாளை புயலாக மாறி கரையை கடக்க உள்ளது.
இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.4.12.21
கனமழை (Heavy rain)
மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், அந்தமான் அருகே வங்கக்கடலில் டிசம்பர் 2-வது வாரத்தில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரிய பாதிப்பு இல்லை (No major impact)
தமிழகம் நோக்கி நகரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைய வாய்ப்பு இல்லை என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments