நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பொறுப்பாளர்களாக விவசாயிகளை நியமிக்க வேண்டும் என மதுரையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் (Criticism meeting) விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் கோரிக்கை:
மேலுார் விநாயகபுரத்திலிருந்து விவசாயிகள் கிருஷ்ணன், ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோர் திருவாதவூர் வேப்பங்குடி கண்மாய் வாய்க்காலை துார்வார வலியுறுத்தினர். பாசன குழு தேர்தல் நடத்த வேண்டும். நெல் கொள்முதல் (Paddy Purchase) நிலையத்திற்கு விவசாயிகளை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். கிடாரிப்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறை (Public Works Department) இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு சர்க்கரை (Sugar) நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
மதுரை கிழக்கு ஒன்றிய அலுவலகத்திலிருந்து அழகு: பெரியாறு ஒரு போக பாசன பகுதிகளில் நெல் அறுவடை (Paddy Harvest) துவங்கியுள்ளது. தாமதமின்றி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
மேற்கு ஒன்றியத்திலிருந்து திருப்பதி: பெரியாறு வைகை இரு பாசன கடைமடை பகுதியான வயலுார், வயிரவநத்தம் போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். வாடிபட்டி, கிழக்கு, மேற்கு ஒன்றியங்களில் நெல்கொள்முதல் நிலையங்களை தாமதமின்றி திறந்தால் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
செல்லம்பட்டி ஒன்றியத்திலிருந்து ராமன்: முதலைக்குளம் ஊராட்சியில் 7 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அங்கு அம்மா மினி கிளினிக் (Amma Mini Clinic) துவக்க வேண்டும். அங்கு பழுதான கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கட்டட வசதி செய்ய வேண்டும். விக்கிரமங்கலம் உரப்பனுார் வழியாக விமான நிலையம் செல்லும் கால்வாய் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காலத்தில் அமைக்கப்பட்டது. அதை துார்வார வேண்டும்.
பங்கு பெற்றவர்கள்:
கலெக்டர் அன்பழகன் தலைமையில் வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், நேர்முக உதவியாளர் தனலட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் சுகுமாரன், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ், சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மண்டல மேலாளர் புகாரி, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை உள்ளிட்டோர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விரைவில் வரப்போகிறது புயல் நிவாரணம்! மத்திய அரசிடம் ரூ.600 கோடி கேட்டுள்ளது வேளாண் துறை!
மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி! கள பயிற்சியில் மாணவர்கள்!
பருவம் தவறி பெய்த கனமழையால், அறுவடைக்குத் தயாரான 10,000 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது! விவசாயிகள் வேதனை
Share your comments