வட தமிழக பகுதியைக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று நெருங்க உள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெருங்கும் தாழ்வுப்பகுதி (Approaching lowlands)
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வங்கக்கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று (வியாழக்கிழமை) நெருங்குகிறது.
மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது.
18.11.21
அதி கனமழை (Very heavy rain)
இந்த நிகழ்வுகள் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும்.
எனவே மேற்சொன்ன மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. அதி கனமழை என்றால், ஓரிரு இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகும்.
கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மிக கனமழை (Very heavy rain)
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழை பெய்யக்கூடும்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதில் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு அலேர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
19.11.21
மிக கனமழை (Very heavy rain)
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சேலம், தருமபுரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
20.11.2021
கனமழை (Heavy rain)
திருவள்ளுர், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னையில் பரவலாக இன்று மழை பெய்யும்.ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே 2 முறை பெய்த கனமழையின்போது, தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அந்த அளவுக்கு மழை பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை வட தமிழகப் பகுதியை நோக்கி வரும் தாழ்வுப்பகுதி பாதையில் சென்னை சரியான திசையில் இருப்பதால், பரவலாக மழை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
பிற்பகலில் மழை
அதிலும் குறிப்பாக காலையில் மழை சற்று குறைவாக காணப்பட்டாலும், பிற்பகலில் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
வங்கக்கடல் பகுதிகள் (Areas of the Bay of Bengal)
18.11.2021
மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே,மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விடுமுறை (Holiday)
கனமழை எச்சரிக்கையால் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மழையால் பாதித்த பயிர்கள்: கணக்கெடுக்கும் பணி துவக்கம்!
ஓராண்டை நெருங்கும் விவசாயிகளின் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி பேரணி!
Share your comments