1. விவசாய தகவல்கள்

சமச்சீர் உரப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Awareness training on balanced fertilizer use!
Credit : ACHR News

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காக MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் சமச்சீர் உரப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம், இணையவழி வாயிலாக நடத்தப்படுகிறது.

இதில் அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டுப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமச்சீர் உரப்பயன்பாடு (Balanced fertilization)

சமச்சீர் உரப்பயன்பாடு குறித்த விழிப்புணர்வை, விவசாயிகள் பெற்றுக்கொள்வது பலவிதங்களில் பலனளிக்கும்.

விவசாயம் மேம்பட (Improve agriculture)

குறிப்பாக மண்ணின் வளம் அறிந்து விவசாயத்தை மேம்படுத்த, சமச்சீர் உரப்பயன்பாடு தேவையான ஒன்றாக உள்ளது.

இணையவழி பயிற்சி (Online training)

இதனைக் கருத்தில்கொண்டு, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் சமச்சீர் உரப்பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று நடத்தப்பட உள்ளது.

விஞ்ஞானிகள் பங்கேற்பு (Participation of scientists)

ஈரோடு நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் வி.ரேவதி, ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர். கார்த்திகா, கோபிசெட்டிப்பாளையம் வேளாண்துறை உதவி வேளாண் இயக்குநர் வி.ஜீவதயாளன் ஆகியோர் தொழில்நுட்ப விளக்கவுரை அளிக்கின்றனர்.

லிங்க் (Link)

Join with Zoom Meeting
கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
https://us02web.zoom.us/j/6689229190?pwd=eVBiU1RaZHZ6eThvb3lqd0FaT1JGZz09#success
Meeting ID : 668 922 9190 Passcode : 2HMfYF

நடைபெறும் நாள் (The day of the event)

18.06.21

பயிற்சி நேரம் (Training time)

நண்பகல் 11 மணி முதல் பகல் 1 மணி வரை

திருச்சியில் பயிற்சி (Training in Trichy)

இதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் மற்றும் திருச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில், சமச்சீர் உர மேலாண்மை குறித்த இணையவழி விழிப்புணர்வு முகாம் இன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

வல்லுநர்கள் பங்கேற்பு (Participation of experts)

இதில் துவாகுடி நீர் பாசன மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் வேளாண் இணை இயக்குநர் பா.இளங்கோவன், மண்ணியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் வெ. தனுஷ்கோடி உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

பங்கேற்க விரும்புபவர்கள் (Those who wish to participate)

பின்வரும் லிங்க்-கில் இணையலாம்
https://zoom.us/j/4145103417?pwd=OTFUc0FvcGY0TTVLcGxYajJ1SVRMdz09#success
Meeting ID : 414 510 3417
Passcode : sirugamani

இணைந்து ஏற்பாடு (Arranged together)

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் , MYRADA வேளாண் அறிவியல் நிலையமும், இணைந்து இந்த இணையவழி கருத்தரங்கம் மற்றும் பயிற்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

மன அழுத்தத்தை குறைக்கிறது விட்டமின் சி நிறைந்த பழங்கள்

வறட்சியிலும் நாவல் பழம் விளைச்சல்! விவசாயிகள் மகிழ்ச்சி!

English Summary: Awareness training on balanced fertilizer use! Published on: 17 June 2021, 10:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.