1. விவசாய தகவல்கள்

நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய் - கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி அறிவுரை வழங்கியுள்ளார்.

நெல் பயிரில் இலைக்கருகல் நோய்

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சுமார் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

 தற்போது, நிலவும் சீதோஷ்ண நிலையில் நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோயின் தாக்குதல் பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது.

இவை, இலைப்பரப்பின் மீது நீரில் நனைத்தது போன்று மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும். இலைகளின் ஓரங்களில் மஞ்சள் கலந்த வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில் நீளவாக்கில் பாதிப்பு காணப்படும். நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும், சுருண்டும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • இவ்வாறு இருந்தால், விவசாயிகள் 3 சதவீத வேப்ப எண்ணெய் அல்லது 5 சதவீத வேப்பங்கொட்டையிலிருந்து எடுத்த சாற்றைத் தெளிக்க வேண்டும்.

  • ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்லின் கலவை 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்சிகுளோரைடு 1.25 கிலோ என ஹெக்டேருக்கு கலந்து தெளிக்க வேண்டும்.

  • நோயின் தீவிரம் அதிகம் காணப்பட்டால் 15 நாள்கள் இடைவெளியில் மறுமுறையும் மேற்கண்ட மருந்துகளைத் தெளித்தால், இந்த பாக்டீரியல் இலைக்கருகல் நோயின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க...

விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விதைப் பரிசோதனை அவசியம் - வேளாண் துறை

PM- KISAN மோசடி: ரூ.110 கோடி வரை முறைகேடு, 18 பேர் கைது - ககன்தீப்சிங் பேடி!வரும்

நாட்களில் காய்கறி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு!பால்

English Summary: Bacterial Leaf Disease in Paddy Crop and its Control Measures Published on: 09 September 2020, 06:49 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.