ஈரோடு மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி கூறியுள்ளார்.
ஈரோடுமாவட்டத்தில் உள்ள கால்வாய்களின் ஆயக்கட்டுப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்பொழுது அறுவடைப் பருவத்தை நெருங்கியுள்ளன. இதையடுத்து மாவட்டத்தில் ஆங்காங்கே அறுவடைப் பணிகள் துவங்கியுள்ளன.
நெல் கொள்முதல் (Purchase of paddy)
அறுவடை செய்யும் நெல்லினை கொள்முதல் செய்ய நேரடிநெல் கொள்முதல் மையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தொடங்கப்படவுள்ளன.
தற்பொழுது ஈரோடு வட்டாரம் வைராபாளையத்திலும், பெருந்துறை வட்டாரத்தில் பெத்தாம்பாளையத்திலும் ஏற்கனவே கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
முன்பதிவு அவசியம் (Booking is required)
விவசாயிகள் இந்த மையங்களை பயன்படுத்தி தாங்கள் விளைவித்த நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம்.இதற்கு ஏதுவாக விவசாயிகள் ஆன்லைன் மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.
ஏதேனும் ஒருகணிணி மூலமாகவோ அல்லது பொது இ சேவைமையங்கள் மூலமாக http://tncsc-edpc.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
சுயவிபரம்
-
நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தின் விபரம்
-
பரப்பளவு
-
எதிர்பார்க்கும் மகசூல்
-
கொள்முதல் மையத்திற்கு
-
நெல்லினைக் கொண்டுவரும் உத்தேச தேதி
விவசாயிகள் மேலே கூறிய ஆவணங்களுடன் தங்கள் பெயரைப்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் சான்று ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் பதிவு உறுதி செய்யப்பட்ட விபரம், நெல் கொள்முதல் மையத்தின் பெயர் நாள் ஆகியவை அனுப்பி வைக்கப்படும்.
நெல் விற்பனை (Sale of paddy)
விவசாயிகள் அந்த மையங்களுக்கு சென்று நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம். எனவே ஈரோடு மாவட்ட விவசாயிகள் இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்
கிருஷ்ணன் உண்ணி
மாவட்ட ஆட்சியர்
ஈரோடு
மேலும் படிக்க...
Share your comments