மரபணு மேம்படுத்தப்பட்டத் திலேப்பியா மீன்களை (Tilapia Fish) வளர்த்து விவசாயிகளுக்கு பயன்பெற வேண்டும் என திருநெல்வேலி மீன் வளத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கiள மற்ற மீன் இனங்களைக்காட்டிலும் குறைந்த பாரப்பளவில் அதிக எண்ணிக்கையில் இருப்பு செய்து வளர்க்கலாம்.
சிறப்பு அம்சங்கள் (Special Features)
-
இவ்வகை மீன்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
-
மற்ற மீன்களைக் காட்டிலும் பண்ணைக் குட்டைகளில் இம்மீன்கள் மிக வேகமாக வளரக் கூடியவை.
-
நீரின் அமில மற்றும் கார தன்மையின் ஏற்ற தாழ்வுகளையும் நன்றாக எதிர் கொண்டு வேகமாக வளரக்கூடியது.
மீன் பண்ணை (Fish Farm)
எனவே, விவசாயிகள் தங்களது பண்ணைக் குட்டைகளில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை தேர்வு செய்து வளர்த்து அதிகளவில் பயன்பெறலாம். திலேப்பியா மீன் இனக் குஞ்சுகள் (கிப்ட் திலேப்பியா மீன் குஞ்சுகள்) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை அருகில் அமைந்து உள்ள அரசு மீன் பண்ணையில் ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
அவற்றை விவசாயிகள் கொள்முதல் செய்து தங்களது மீன்பண்ணையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து அருகிலுள்ள நீர் நிலைகளில் பரவாமல் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். மேலும், திருநெல்வேலி மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்வது கொள்வதும் அவசியம்.
கூடுதல் விவரங்களுக்கு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம். 42 சி, 26வது குறுக்குத் தெரு மகாராஜநகர், திருநெல்வேலி என்ற முகவரியிலோ அல்லது 0462- 2581488 என்ற தொலைபேசி எண்ணிலோத் தொடர்பு கொள்ளலாம்.
தகவல்
மாவட்ட செய்தி மற்றும் மக்கள்தொடர்பு
திருநெல்வேலி
மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் வளர்ப்புக்கு தடைசெய்யப்பட ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்! குழிதோண்டி புதைத்த அதிகாரிகள்!
Paytmல் LPG சிலிண்டர் Book செய்தால் ரூ.500 Cashback - சலுகை 2 நாட்கள் மட்டுமே!
குளிரில் உறைந்து வீணாகும் பயிர்களை பாதுகாக்கிறது பசுவின் சிறுநீர்! ஆய்வில் தகவல்!
Share your comments