ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தேங்காய் கொப்பரைகளை விற்பனை செய்துப் பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேங்காய் கொள்முதல் (Purchase of coconut)
சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக சுமார் 400 மெட்ரிக் டன் வீதம் தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
விலை நிர்ணயம் (Pricing)
இதற்கான விலை அரவைக் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.103.35 எனவும், பந்துக் கொப்பரைக்கு ரூ.106 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஈரப்பதம் (Moisture)
தர நிர்ணயம் அரவை கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வைக்கோல், தூசு, நார் போன்ற அயல் பொருள்கள் அதிகபட்சம் 1 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தேங்காயின் தரம்
-
பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லுக் கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம்.
-
பந்துக் கொப்பரையின் ஈரப்பதம் அதிகபட்சம் 7 சதவீதம் இருக்கலாம்.
-
சுற்றளவு குறைந்தபட்சம் 75 மி.மீ இருக்க வேண்டும்.
-
அயல் பொருள்கள் O.2 சதவீதம், பூஞ்சாணம், கருமை நிறம் கொண்ட கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 2 சதவீதம் மட்டுமே இருக்கலாம்.
-
சுருக்கம் கொண்ட கொப்பரை அதிகபட்சம் 10 சதவீதம், சில்லுகள் அதிகபட்சம் 1 சதவீதம் இருக்கலாம்.
கொப்பரைத் தேங்காய் (Copper Coconut)
தேங்காய் அளவுக்கு மீறி முற்றியிருந்தால் அதன் உள்ளே இருக்கும் நீர் முற்றிலும் வற்றிவிடும். இத்தகைய முற்றிய தேங்காயே கொப்பரை எனப்படும். நீர் முழுவதும் வற்றாத தேங்காயை வெயிலில் உலர்த்தி கொப்பரை ஆக்குவதும் உண்டு. அதிலிருந்தே எண்ணெய் எடுக்கப்படுகிறது.
மருத்துவப் பயன்கள் (Medicinal uses)
-
முற்றிய தேங்காய் ஆண்மையைப் பெருக்குவதோடு அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தாமதப்படுத்த உதவும்.
-
தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.
-
சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், வாரம் ஒருநாள் தேங்காய் எண்ணெய்யைத் தலையில் தேய்த்து, ஊற வைத்து குளித்து வந்தால் பெண்களின் கூந்தல் வேர்க்கால்கள் பலமடைவதோடு, பொடுகுத்தொல்லை நீங்கும்.
முகம் பொலிவுப் பெற உதவும்.
-
கேரள மக்கள் அன்றாட சமையலிலும் தேங்காய் எண்ணெய்யையே பயன்படுத்துகின்றனர்.
மேலும் படிக்க...
கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!
121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!
Share your comments