1. விவசாய தகவல்கள்

மத்தியக்குழு 28ம் தேதி தமிழகம் வருகை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Central Committee to visit Tamil Nadu on the 28th!
Credit : Update News 360

புரெவி (Cyclone Burevi) புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் (Central Committee) வரும் 28-ந்தேதி தமிழகம் வருகின்றனர்.

தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றதைத் தொடர்ந்து, புரெவி புயல் டிசம்பர் மாத தொடக்கத்தில் உருவானது.

புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் 2, 3 மற்றும் 4-ந் தேதிகளில் பலத்த மழை பெய்தது.

இதன் பாதிப்பு தமிழகத்தின் பல பகுதிகளில் எதிரொலித்தது. அங்கு பலத்த பாதிப்புகள் ஏற்பட்டன. பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. வீடுகள் சேதமடைந்தன. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன.

தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனவே உயிர்ச்சேதங்கள் குறைவாக இருந்தன.

நிவர் புயல் ஏற்படுத்திய சேதங்களை மதிப்பிட மத்திய குழுவினர் தமிழகத்துக்கு 5-ந் தேதி வந்தனர். இங்கு 3 நாட்கள் தங்கி இருந்து, நேரில் பார்வையிட்டு மதிப்பிட்டனர். புதுச்சேரிக்கும் சென்று அங்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்தனர்.

இந்தநிலையில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட 2ம் கட்டமாக மத்திய குழுவினர் தமிழகத்துக்கு வர உள்ளனர். அவர்கள் வருகிற 28-ந் தேதி இங்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குழுவில் மத்திய உள்துறை, நிதித்துறை, சுகாதாரத் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க...

குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டித் தரும் சிறு தானியங்கள்!

வாரணாசியிலிருந்து கத்தாருக்கு முதன்முறையாக அரிசி ஏற்றுமதி -APEDA பெருமிதம்!

மிளகாய் பொடியில், கழுதை மலம் கலப்படம்- மக்களே உஷார்!

English Summary: Central Committee to visit Tamil Nadu on the 28th! Published on: 24 December 2020, 07:19 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.