தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 27ம் தேதி வரை வறண்ட வாநிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வறண்ட வானிலை (Dry Weather)
24.01.21 முதல் 27.01.21 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
வானிலை முன்னெச்சரிக்கை (Weather Forecast)
-
28.01.21ம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும.
-
அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை (chennai)
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும்.
பனிமூட்டம் (Fog)
காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயம் செய்ய 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம்!
நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!
Share your comments