வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையைக் கடந்தது (Crossed the shore)
அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி முதல் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது. தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கடந்தது என்றும், முழு பகுதியும் அதிகாலை 5.30 மணிக்குள் கரையைக் கடந்துவிட்டது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கரையைக் கடந்ததும் தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலு குறைந்து, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 23-ந் தேதி வரை சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
6 மாவட்டங்களில் கனமழை (Heavy rain in 6 districts)
அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.
21.11.21
அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் நாளை கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்த வாரம் மழை அதிகம் (More rain next week)
இதன் தொடர்ச்சியாக அடுத்த வாரம் தமிழகத்தில் இயல்பை விட சற்று மழை அதிகம் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மீண்டும் மழை (Rain again)
அதாவது, கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகிறது, இதன் காரணமாக 26 மற்றும் 27-ம் தேதிகளில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
பட்டுப்புழு வளர்க்க விருப்பமா?கருவிகள் வாங்க ரூ.52,500 வரை மானியம்!
நெல், வெங்காய பயிர்களுக்கு காப்பீடு- விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments