1. விவசாய தகவல்கள்

9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Chance of heavy rain with thunder in 9 districts!
Credit : DNA India

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :

மிக கனமழை எச்சரிக்கை(Heavy Rain)

இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்ல மேலடுக்கு சுழற்சி (Upper air Circulation) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

மிதமான மழை (Moderate Rain)

மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecase)

10.01.2021

  • ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடியை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

  • தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், ஏழைய மாவட்டங்கடிளல் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

11.01.21

  • ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • அதேநேரத்தில் சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை (Chennai)

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச மழைபதிவு (Maximum Rain)

அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுராலகோடு, புத்தன் அணை, கொடைக்கானல், போர்ட் கிளப் ஆகியவற்றில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

ஜனவரி 10ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

11ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதேபோல் 12ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும், 12,13ம் தேதிகளில் கேரளக் கடலோர பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும், பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!

English Summary: Chance of heavy rain with thunder in 9 districts! Published on: 09 January 2021, 03:43 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.