தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் நீலகிரி, கோயமுத்தூர், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்த வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
மழை (Rain)
தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வறண்ட வானிலை (Dry Weather)
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
02.08.21
மிதமான மழை (Moderate rain)
நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வறண்ட வானிலை (Dry Weather)
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
03.08.21
நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஒருசில உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வறண்ட வானிலை (Dry Weather)
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலை (Temperature)
வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழை பதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு மற்றும் வால்பாறையில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
அரபிக்கடல் பகுதிகள்
4.08.21 வரை
-
தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிப் கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க...
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!
குறுமிளகு கொடிகளில் நோய்த் தாக்குதலைத் தடுக்க மருந்து தெளிக்கும் விவசாயிகள்!
Share your comments