தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உள் மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
27.01.22
கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
28.01.22
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
ஜனவரி 29, 30
தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
மேலும் படிக்க...
மஞ்சள் மற்றும் தயிரின் பேஸ் பேக் டிப்ஸ்! அதன் நன்மைகள் என்ன?
PM Kisan திட்டம்: ஆண்டுக்கு 6000த்திற்கு பதில் 8000 வழங்க வாய்ப்பு!
Share your comments