1. விவசாய தகவல்கள்

6 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

T. Vigneshwaran
T. Vigneshwaran
MK Stalin Announced Compensation For Farmers

சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.1,597.18 கோடி ரூபாயை சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வேளாண் துறையில் தொடர் வளர்ச்சியானது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். உணவுப் பாதுகாப்புடன் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தொடர் வருமானம் கிடைத்திடவும், மாநில அளவில் நிலையான பொருளாதார வளர்ச்சி அடைவதற்கும் மிகவும் இன்றியமையாததாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான வேளாண்மைத் துறைக்கென 2021-22ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வேளாண் துறை என்ற பெயரை வேளாண்மை - உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதோடு, இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து நிலையான வேளாண் வளர்ச்சிக்கு வழிவகுக்கப்படுகிறது.

2020-2021ஆம் ஆண்டில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறுவை, சம்பா மற்றும் குளிர்காலப் பருவப் பயிர்கள் 42.75 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர்க் காப்பீடு செய்வதற்காக, 25.76 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து இருந்தனர். குறுவை பருவத்துக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.133.07 கோடி, 2,02,335 விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட்டுள்ளது.

முதல்வர் தலைமையிலான அரசால், நெருக்கடியான சூழ்நிலையிலும் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2021-22ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர ரூ.2,327 கோடி நிதியை, 2021-22 ஆம் வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது. அதில், 2020-2021ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கான தமிழக அரசின் பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,553.15 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது.

இதன் காரணமாக, 2020-2021ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையான ரூ.1,597.18 கோடியில், இப்கோ-டோக்யோ(IFFCO) பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.1,089.53 கோடியும், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.507.65 கோடியும், சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்குத் தற்போது வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கான இந்த இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க மட்டுமே முதல்வர் இன்று 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், 2021-2022ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களைக் காப்பீடு செய்ய 26.08.2021 அன்று தமிழக அரசால் 16.08.2021ஆம் நாளிட்ட வேளாண்மை - உழவர் நலத்துறை அரசாணை எண்.141-ல் ஆணை வெளியிடப்பட்டு, விவசாயிகள் சம்பா பருவப் பயிர்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதல் செலுத்தி வருகின்றனர்.

13.10.2021 வரை, 61871 விவசாயிகளால் பயிர்க் காப்பீடு செய்யப் பதிவு செய்யப்பட்டு, 67,556 ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப் பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனுக்காகச் செயல்பட்டு வரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து தங்கள் பயிரைக் காப்பீடு செய்துகொள்ளுமாறு முதல்வர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க:

அறுவடை நெல் பாதிக்க விடக்கூடாது- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை: குற்றால அருவிகளில் வெள்ளம்

English Summary: Chief Minister Stalin began work to provide compensation to 6 lakh farmers Published on: 18 October 2021, 02:38 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.