குழந்தை இறந்து பிறந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, அரசு பெண் மருத்துவர் வழங்கிய காசோலையை பெற விவசாயி மறுத்து விட்டார்.
பிரசவத்திற்காக அனுமதி (Addmitted for childbirth)
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், காரத்த தெருவைச் சேர்ந்தவர் மருதமுத்து. 33 வயதான இவர் ஒரு விவசாய தொழிலாளி. இவரது கர்ப்பிணி மனைவியை, பிரசவத்திற்காக உடுமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, அரசு பெண் மருத்துவர் ஜோதிமணி, சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமது மனைவியை அனுமதித்துள்ளார். விதி அவரை அங்கும் விட்டுவைக்கவில்லை.
கட்டணத்தை அளிக்க உத்தரவு (Order to pay the fee)
ஆனால் அங்கும் அதே மருத்துவர் பிரசவம் பார்த்துள்ளார். இதற்காக 37 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்திய நிலையில், மருத்துவர், இறந்த நிலையில் குழந்தையை வெளியே எடுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த மருதமுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். உடுமலை ஆர்.டி.ஓ., கீதா விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து, மருத்துவர் ஜோதிமணி, பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 37 ஆயிரம் ரூபாயை திரும்ப வழங்க வேண்டும் என, ஆட்சியர் உத்தரவிட்டார்.
வாங்க மறுப்பு (Refusal to receive)
இந்த சம்பவம்குறித்து, மடத்துக்குளம் தாசில்தார் ஜலஜா கூறுகையில், ஆட்சியரின் உத்தரவுப்படி, மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட 37 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, மருதமுத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயன்றோம். ஆனால், அதை வாங்க மறுத்து விட்டனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
உண்மையில் மருதமுத்துவின் மனைவிக்கு அரசு மருத்துவமனையிலேயே மருத்துவர் ஜோதிமணி, பிரசவம் பார்த்திருந்தால், குழந்தை நலமுடன் பிறந்திருக்கும். ஆனால், தான் ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவர் என்பதையே மறந்து, பணத்திற்காகப் பாதை மாறிய மருத்துவர் ஜோதிமணி போன்றவர்கள் மருத்துவத் தொழிலையேச் செய்யத் தகுதியற்றவர்கள்.9
டிஸ்மின் ஏன் கூடாது?
அரசு மருத்துவர் என்ற அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு, அரசிடம் இருந்து சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு, மருத்துவத்தொழில் மூலம் தனியாக காசு சம்பாதிக்க விரும்பும் இத்தகைய மருத்துவர்களை அரசு ஏன் டிஸ்மிஸ் செய்யாமல் வைத்திருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.
அதேநேரத்தில் குழந்தையை இழந்துத் தவிக்கும் பெற்றோர், இந்த மருத்துவர் வழங்கிய பணத்தை வாங்க மறுத்தது, உண்மையிலேயே வரவேற்கத் தக்கது. இதுவே அந்த மருத்துவருக்கு கொடுத்த சவுக்கடிக்குச் சமம்.
மேலும் படிக்க...
மின்கட்டணம் செலுத்த QR Code: புதிய வசதி அறிமுகம்!
வந்தாச்சு சலுகை விலையில் பால்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
Share your comments