பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80,000 மானியம் வழங்கப்பட உள்ளதால், வாங்கிப் பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். விருப்பம் உள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
பந்தல் சாகுபடி
கொடி காய்கறிகளாக பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய்,பாகற்காய் போன்றவற்றை பந்தல் அமைத்து சாகுபடி செய்தால், அதிக மகசூல் கிடைக்கும். காய் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
சிக்கலைப் போக்க
நிதிப்பற்றாக்குறையால் பல விவசாயிகள் பந்தல் முறைக்கு மாறுவதில் சிரமம் உள்ளது. விவசாயிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், தோட்டக்கலை சர்பில் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின்கீழ் பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.பந்தல் காய்கறி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் பின்னோக்கு மானியமாக வழங்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்
சிட்டா, அடங்கல், எப்.எம். பி. வரைபடம், கிராம நிர்வாக அலுவலர் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
தொடர்புக்கு
இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள், கூடுதல்
விபரங்களுக்கு, 77083 28657, 9095630870, 89392 63412 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
தகவல்
ஷர்மிளா
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர், பொங்கலூர் வட்டாரம் கோவை மாவட்டம்,
மேலும் படிக்க...
Share your comments