சமீபத்தில் பெய்த கனமழையால், நகர்ப்புறம் மற்றும் கிரமப்புறத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றம் காரணமாக பெய்து வந்த கனமழையால் நகர்புறத்தில் மக்கள் அத்தியாவசை தேவையில் இருந்து அலுவலகம் செல்வது வரை சிரமத்தை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கிரமப்புறங்களிலும் இயல்பு வாழ்க்கை மட்டுமில்லாமல் வருங்காலமும் பாதித்துள்ளது. கிரமப்புறங்கள் வயல்வெளியால் நிறைந்தவையாகும். ஆனால் கடந்த மாதம் பெய்து வந்த கனமழையால் பயிர்களில் அதிகம் தண்ணீர் சென்று, பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறுவை வகை பயிர்கள்(Rabi Crops) காலம் நடக்கும் நிலையில், ஒசூர் மக்கள் பயிரிட்டிருந்த ராகி பயிர்களும் மழை தண்ணீரில் மிதந்தன.
இவ்வாறு மழை நீரால் சேதமடைந்த இப்பயிர்களை, மாடுகளுக்கு கூட தீவினமாக கொடுக்க முடியாது என வேதனை தெரிவித்தனர். மேலும் இப்பயிர்கள் அறுவடைக்கு தயரான பயிர்கள் என்பதும் குறிப்பிடதக்கது. குறுவை பயிர்கள் அதாவது (Rabi Crops) அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான புரட்டாசி பட்ட பயிர்கள் ஆகும். அகவே கடந்த மாதம் பயிரிடப்பட்ட ராகி போன்ற பல பயிர்கள், கடந்த மாதம் பெய்த கனமழையால் சேதமடைந்துள்ளன. ஆகவே பல பகுதிகளில் விவசாய்கள் அரசிடம் உரிய இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சரி இந்த குறுவை பயிர்கள் என்றால் என்ன, அதையும் அறிந்திடுங்கள்.
குறுவை பயிர்கள் (Rabi Crops)
குறுவை பயிர்களில், காய்கறி வகை என எடுத்துக்கொண்டால் பட்டாணி, கொண்டைக்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆகவே தான் இடையில் தக்காளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டது.
தானியங்களில் கோதுமை, வாற்கோதுமை, ராகி போன்றவை பயிரிடப்படும்.
விதைத் தாவரங்கள் என எடுத்துக்கொண்டால், குதிரை மசால், ஆளி, எள், சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், வெந்தயம் போன்றவை குறுவை காலத்தில் பயிரிடப்படும்.
எனினும் இப் பருவங்களில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பயிர்கள் பயிரிடப்படுவதில்லை. ஏனெனில், அந்தந்த மாவட்டத்தின் மண்வளம், சீதோஷணநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொண்டு, வெவ்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
அவ்வாறு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு பயிர்காப்பீடு வழங்கப்படுகிறது. இதைத்தவிர பிற மாவட்டங்களில், நெல் சாகுபடிக்கு காப்பீடு செய்ய முடியாது.
அவ்வகையில் ஒசூர் மாவட்டத்தில், ராகி பயிரடப்பட்டிருந்தது. தற்போது இங்கு பயிர்கள் மழையால் பெரும் அளவு சேதமாகியுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments