வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை (Weather report)
இது வானிலை குறித்து ஆய்வு சென்னை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
வழிமண்டல சுழற்சி (Orbital cycle)
இலங்கைக்குத் தென்கிழக்கில், 1.5 கி.மீ., உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மழைக்கு வாய்ப்பு (Chance of rain)
இதன் காரணமாக திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
3 நாட்களுக்கு மழை (Rain for 3 days)
தென் மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
வறண்ட வானிலை (Dry Weather)
மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.
சூறாவளிக் காற்று (Hurricane force winds)
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 50 சி.மீ., வேகத்தில், இடி, மின்னலுடன் கூடிய சூறாவளிக் காற்று வீசும் வாய்ப்புள்ளது.
மீன்பிடிக்கத் தடை (Prohibition of fishing)
எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!
Share your comments