வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை சென்னை- புதுவை அருகே முழுமையாகக் கரையைக் கடந்தது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கரையைக் கடந்தது (Crossed the shore)
இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலைக் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விடிய விடிய மழை
அதிகாலை 1.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்தது. இதனால் கடலோர பகுதிகளில் மட்டும் பலத்த காற்று வீசி வருகிறது. தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த போது பலத்த காற்று வீசியது. விடிய விடிய சென்னையின் பல பகுதிகளில் மழை விட்டு விட்டுப் பெய்தது.
ரெட் அலேர்ட் வாபஸ் (Red Alert withdraws)
இதைத்தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட ரெட் அலேர்ட் எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை (Holiday)
இந்நிலையில், கனமழை காரணமாக 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரி, காரைகாலிலும், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
-
சென்னை
-
திருவள்ளூர்
-
காஞ்சிபுரம்
-
நீலகிரி
-
விழுப்புரம்
-
வேலூர்
-
ராணிப்பேட்டை
-
கள்ளக்குறிச்சி
-
பெரம்பலூர்
-
திருப்பத்தூர்
-
சேலம்
-
தருமபுரி
-
கிருஷ்ணகிரி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
-
கடலூர்
-
செங்கல்பட்டு
-
அரியலூர்
மேலும் படிக்க...
மழையால் பாதித்த பயிர்கள்: கணக்கெடுக்கும் பணி துவக்கம்!
ஓராண்டை நெருங்கும் விவசாயிகளின் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி பேரணி!
Share your comments