டிராக்டர் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக டீசல் மானியம் சென்றடையக் கூடிய வகையில் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் தெரிவித்துள்ளார்.
டீசல் மானியம் (Diesel subsidy)
போக்குவரத்து துறைக்கு மானியம் கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மீனவர்களுக்கும் கூடுதலாக டீசல் மானியம் வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகச் சட்டப்பேரவையில் இதுதொடர்பாகப் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, பெட்ரோல் விலையை குறைந்தபோதும், அரசு டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விலைக் குறைப்பு (Price reduction)
இதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கடந்த 15 ஆண்டுகளில் மூன்று முறை அதிமுக ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்ட தாகவும் ஆனால் திமுக 4 முறை பெட்ரோல் டீசல் விலையை குறைத்து உள்ளது எனப் பட்டியலிட்டார்.
மேலும் தற்போது அரசின் திட்டங்கள் அதற்கு தேவையான பயன்படும் அவர்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவே பல்வேறு ஆய்வுகள் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அதன்படி பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் இரண்டு கோடி பேர் நேரடியாகப் பயன் பெற்று வருகின்றனர். மேலும் ஏற்கனவே நடத்திய ஆய்வின் படி 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வாகனங்கள் அதிகம் இருப்பதாகவும் இருசக்கர வாகனங்கள் அதிகம் இருப்பதாலும் பெட்ரோல் விலையை 4 ரூபாய் குறைத்திருக்கிறோம்.
டீசலைப் பயன்படுத்துவோரின் வாகனங்கள் 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலானவை. இவை டீசலை பயன்படுத்தி வரும் நிலையில் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கூடுதல் மானியம் (Additional grant)
மேலும் டீசல் அதிகம் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து துறைக்கு மானியம் கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக மீனவர்களுக்கும் கூடுதலாக டீசல் மானியம் வழங்க முடிவு செய்து இருக்கிறோம். மேலும் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை யார் யார் பயன்படுத்துகிறார்கள் அவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தகவல் எதுவும் அரசிடம் இல்லை என்றும் விவசாய பணிகளுக்கு டிராக்டர் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக டீசல் மானியம் சென்றடையக் கூடிய வகையில் ஆய்வு செய்து வெளிப்படையாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ரூ.3 குறைப்பு (Rs.3 reduction)
தற்போது பெட்ரோலுக்கு 3ரூபாய் விலை குறைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து தினமும் ஆய்வு செய்து வருவதாகவும் அதன் பின்னர் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.
தமிழக வேளாண் பட்ஜெட் சிறப்பம்சங்கள்!
2021 இல் விவசாயத் துறையில் புதிய வணிக பதிவு வளர்ச்சி 103 சதவிகிதம் உயர்வு
Share your comments