1. விவசாய தகவல்கள்

மண் வளத்தை மேம்படுத்தும் புதிய மண் நுண்ணுயிரி நீலகிரியில் கண்டுபிடிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Micro Organism
Credit : Daily Thandhi

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகம் உள்ளது. இங்கு நுண் உயிரிகள் முதல் வனவிலங்குகள் வரை அதன் உடற்கூறுகள் டி.என்.ஏ. (DNA) ஆய்வு செய்யப்படுகிறது. இந்தநிலையில் ஆராய்ச்சியாளர்கள் நீலகிரியில் உள்ள மண்ணில் இருந்து மிகவும் அரிதான புதிய நுண்ணுயிரியை கண்டுபிடித்தனர்.

புதிய மண் நுண்ணுயிரி

இந்தியாவின் இதுவரை எந்த பகுதியில் இருந்தும் இந்த மண் பூச்சி வகை தெரிவிக்கப்படவில்லை. 6 இனங்கள் மட்டுமே உலகம் முழுவதும் பதிவாகி இருந்தது. இவை சுவிட்சர்லாந்து, சீனா மற்றும் கொரியாவின் உயரமான பகுதிகளில் உள்ளது. இந்த பூச்சி 1 மில்லி மீட்டர் நீளம் உள்ளதோடு, பறக்க முடியாது. இது ஸ்பிரிங் டெயில்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்டதால், இந்த இனத்துக்கு பயோனிச்சியூரஸ் தமிழன்சிஸ் என்று பெயரிடப்பட்டது.

மண்வளம்

கழிவு பொருட்களை ஊட்ட சத்துக்களாக சிதைத்து மண்ணை (soil) மேம்படுத்துகிறது. கல்லூரி வளாகத்தில் நூற்றாண்டு கட்டிடத்திற்கான கட்டுமானத்திற்காக அகற்றப்பட்ட மண் மாதிரிகளில் முதலில் கண்டறியப்பட்டது.

டி.என்.ஏ. மாதிரி

புல்வெளிகள், வெட்டப்படாத மக்கிய மண் மாதிரிகளில் (Soil Sample) இருந்தது. புதிய இனங்கள் சீனாவில் பெறப்பட்ட ஒத்த மாதிரிகளுடன் அதிக ஒற்றுமையை காட்டுகின்றன.

இந்த இனங்கள் இனப்பெருக்கம் செய்ய குளிர் காலநிலை தேவை. சரியான அடையாளத்தை வெளிப்படுத்த டி.என்.ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. உலகின் பிற பகுதிகளில் பெறப்பட்ட ஒத்த மாதிரிகள் எதுவும் டி.என்.ஏ. செய்யப்படவில்லை. இதுகுறித்த ஆய்வு சர்வதேச இதழில் வெளியிடப்பட்டது.

புதிய இனத்தின் ஆண் மற்றும் பெண் மாதிரிகள் எதிர்கால குறிப்புகளுக்காக கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசின் விலங்கியல் கணக்கெடுப்பில் (ZSI) சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கை ஏற்றுக்கொண்டு வெளியிடப்பட்டது. முதன்மை எழுத்தாளர் முஹ்சினா துனிசா தனது பி.எச்.டி. (Ph.D.,) படிப்புகளுக்காக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!

121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!

English Summary: Discovery of new soil microorganisms in the Nilgiris that improve soil fertility! Published on: 05 July 2021, 07:45 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.