மரம் வளர்ப்பில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் மரங்களில் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் அதிக இலாபம் பெறலாம்.
வாடல் நோய்
இலைகளில் இலை நரம்புகளுக்கிடையே பகுதி பகுதியாக பழுப்பு நிறம் காணப்படும். செடிகள் கருகி வாடிவிடும். நீர் தேங்கி நிற்பதால் வேர்களில் காயங்கள் ஏற்பட்டாலும், பாக்டீரியா மூலம் நோய் உண்டாகிறது. இதனை கட்டுப்படுத்த மரங்களின் அடிப்பாகத்தில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். பிளேண்டோமைசின் 0.1 சதவீதம் மருந்தை வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
அழுகல் நோய்
கழுத்து பகுதி சுருங்கியும் இலைகள் கருகியும் வாடியும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த பிளாண்டோமைசின் 0.1 சதவீதம் மருந்தை வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
இலை அழிவு நோய்
இலைகள் வறண்டு உதிர்ந்து விடும். நாற்றங்காலில் நெருக்கமாக வைப்பதால் ஏற்படுகிறது. நோய் தாக்கிய செடிகளை நீக்கி விடவேண்டும். பின்னர் டைத்தேன் எம் 45 பூஞ்சாளக் கொல்லியை 0.1 சதவீதம் தெளிக்கவேண்டும்.
வெண்படல பரவு நோய்
இலை முழுவதும் பவுடர் பூசியது போல் வெண்ணிறப்படலம் காணப்படும். இதனால் இலைகள் ஒளிச்சேர்க்கை செய்யமுடியாமல் இறக்க நேரிடும். கந்தகத்தூளை இலைகளில் தூவுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இளை துரு நோய்
இலைகளின் மேல்பரப்பில் ஆரஞ்சு நிறப்புள்ளிகள் தோன்றி இலைகள் துருப்பிடித்தது போல் காணப்படும். மேலே குறிப்பிட்டது போல் கந்தக தூளை தூவுவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
பயிர்களின் வளர்ச்சிக்கு ஆதாரம் முளைப்பு திறன் மிக்க விதைகளே
வேர் அழுகல் நோய்
ஆரம்பத்தில் இலைகள் மஞ்சளாக மாறி கருகிய தோற்றத்தை அடையும், மேற்புற இலைகள் செடி உச்சியில் உள்ள இலைகள் தளர்ந்து துவண்டு கீழ்நோக்கி தொங்கும். பின்னர் இலைகள் வாடி இறந்து விடும். வேர்ப்பகுதி நிறம் மாறி அழுகி இருக்கும். இந்நோய் நீர் தேங்குவதாலும், வேரில் காயம் ஏற்படுவதாலும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் தாக்கிய செடிகளை உடனே களைந்து விடுவதன் மூலம், பிளான்டோமைசின் 0.1 சதவீதம் மருந்தை மண்ணின் வேர்பகுதியில் ஊற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இலை வறட்சி நோய்
இலைகளின் அடர் பழுப்பு முதல் வெளிர் பழுப்பு வரை புள்ளிகள் காணப்படும். ஒன்றோடொன்று ஒட்டி தளிர் வராமல் இருக்கும். ஒளிச்சேர்க்கையை குறைத்து வளர்ச்சியை பாதிக்கும். இதனை கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 மருந்தை 0.1 சதவீதம் இலைகள் மேல் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
தண்டு மற்றும் வேர்பாதிப்பு நோய்
நாற்றுகளின் இலைகள் மஞ்சளாகவும் வேர்கள் அழுகியும் காணப்படும். இது அதிக நீர் தேங்குவதால் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த எமிசான் 6 என்ற மருந்தை 0.01 சதவீத கரைசலை இலைகளில் தெளித்தும், வேர் அருகில் மண்ணிலும் ஊற்ற வேண்டும்.
கரும்பு சாகுபடியில் இனிப்பான லாபம் பெறுவதற்கான வழிமுறைகள்
நாற்று இறப்பு நோய்
மண்ணுக்கு அருகில் உள்ள தண்டுப்பகுதி முதலில் தாக்கப்பட்ட பின் செடிகள் சுருங்கி, மெலிந்து பழுப்பு நிறமாக மாறி இறந்து விடும். இதனை கட்டுப்படுத்த 0.1 சதவீத கரைசலை மண்ணில் ஊற்றி மண்ணை நனைப்பதால் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
இலைப்புள்ளிநோய்
ஆரம்ப நிலையில் இலைகளில் ஊதாவிலிருந்து பழுப்பு நிறம் வரை புள்ளிகள் காணப்படும். படிப்படியாக தீவிரமடையும் இலைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும். இதனை கட்டுப்படுத்த பெவிஸ்ட்டின் மருந்தினை 0.01 சதவீதம் தெளிக்கவேண்டும். மேலும் நோய் எதிர்ப்புசக்தி மிக்க, வீரியம்மிகுந்த தரச்சான்று பெற்ற விதைகளை தேர்ந்தெடுத்து பயிர்செய்யவேண்டும்.
Share your comments