வருகின்ற 31ம் தேதிக்குள் எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த பயிர்களுக்கு, காப்பீடு செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவிப்பை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.
பயிர் காப்பீட்டு திட்டம் (Crop Insurance Scheme)
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான காரீஃப் பருவப் பயிர்களை (Kharif Crops)ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, தமிழக வேளாண் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பயிர் காப்பீடு திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை, மத்திய அரசு செய்துள்ளது.
அதன்படி, கீழ்கண்ட மாவட்டங்களில்(Districts), கீழ்கண்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வரும், 31க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
நெல் (Paddy)
தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை
மக்காச்சோளம் (Corn)
தேனி, திண்டுக்கல், அரியலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, விழுப்புரம்
துவரம் பருப்பு (Split Gram Lentil)
அரியலூர், தேனி, தர்மபுரி, புதுக்கோட்டை
உளுந்தம் பருப்பு (Black gram)
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, அரியலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவள்ளூர், கோவை
பச்சை பருப்பு (Green lentils)
சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவள்ளூர், கோவை
நிலக்கடலை (Groundnut)
சேலம், அரியலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, தேனி
சோளம் (Corn)
அரியலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திருநெல்வேலி
கம்பு (Rye)
தேனி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர்
எள் (Sesame)
தேனி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், கோவை
பருத்தி (Cotton
சேலம், தூத்துக்குடி,
கேழ்வரகு (ragi)
தர்மபுரி
தட்டை பருப்பு (Flat lentils)
சேலம்
சூரியகாந்தி (Sun Flower)
தேனி
சாமை (Tar)
திருவண்ணாமலை, தர்மபுரி,
கொள்ளு (gram)
கோவை
காப்பீடு செய்யும் இறுதி நாள் வரைக்கும் காத்திருக்காமல், விவசாயிகள் முன்கூட்டியே பதிவு செய்து, காப்பீடு திட்ட பலன்களை முழுமையாக பெற வேண்டும் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு
Share your comments