அதிக மகசூல் பெற விவசாயிகள் அனைவரும் பயிர் சுழற்சி அல்லது மாற்றுப்பயிர் சாகுபடியில் ஈடுபடுமாறு வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை தெரிவித்துள்ளார். விளை நிலத்தில் ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதினால் மண்ணின் வளம் பாதிக்கப்படும் என்கிறார்.
ஒரு பயிர் அறுவடை முடிந்ததும் மீண்டும் அதே பயிரை தேர்வு செய்யாது வேறு பயிரை தேர்ந்தெடுத்து உழுவதன் மூலம் மண்ணில் உள்ள தழைச்சத்துக்கள் அனைத்தும் வீணாக்காமல் முழுமையாக பயன்படுத்த இயலும். நெல் அறுவடை செய்த பின்பு பயிறு வகைகள் அல்லது எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றை சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.
பயிர்வகைகளான உளுந்து, தட்டை போன்றவற்றை பயிர் செய்வதன் மூலம் வேர் முடுச்சுகளில் தழைச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், மிக குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் பெற முடியும். மண்ணின் வளத்தை பெருக்க கொளுஞ்சி, கொள்ளு, சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றை பயிர் செய்து ஒரு மாதம் கழித்து பூக்கும் தருவாயில் அதனை மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளத்தை பெருக்க வேண்டும்.
உவர் அல்லது பயன்படுத்தாத நிலங்களில் தக்கைப்பூண்டினை நெருக்கமாக உழுது பூக்கும் நிலையில் மடக்கி உழுவதன் மூலம் களை வளர்ச்சியினை கட்டுப்படுத்தலாம். மண்வளம் காக்கவும், மகசூல் அதிகரிக்கவும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்யும்படி விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments