பொதுவாக ஈரப்பதம் மிக்க காலங்களில் தான் கரையான் பூச்சிகள் தோன்றும். இவை நிலப்பரப்பிலும், மரங்களிலும் ஆங்காங்கே காணப்படும். இவை பெரும்பாலும் தென்னை மரங்களை தாக்குவாதல் மரங்கள் வலுவிழந்து, நோய் தாக்கியது போன்று மாறிவிடும். இதனால் உற்பத்தியும் பெருமளவில் பாதிக்கபடுகிறது. இதனை எளிய முறையில் தடுக்க இயலும் என்கிறார்கள் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் பிரிவு விஞ்ஞானி.
தென்னை மரங்களில் பல்வேறு நோய்கள், பல்வேறு காலங்களில் தோன்றுகின்றன. அவை தென்னை ஓலை கருகல்நோய், தென்னை பிஞ்சு அழுகல் நோய், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் போன்ற காரணங்களினால் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இவை தவிர, தென்னை மரங்களை கரையான் பூச்சிகளும் தாக்குகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நிலையான வருவாய் தரும் நீண்ட கால மரம் என்பதால் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். ஆனால் இதுவரை இல்லாத அளவுற்கு, வெள்ளை சுருள் ஈ, கூன் வண்டு பாதிப்பின் தொடர்ச்சியாக, தற்போது கரையான் அரிப்பும் அதிகரித்து வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் பிரிவு விஞ்ஞானி கூறுகையில், ஈரப்பதம் உள்ள இடங்களில் கரையான்கள் நிரந்தரமாக தங்கி வளரும் என்பதால் ஆரம்ப கட்டத்திலேயே, மரத்தின் கீழ்ப்பகுதிலிருந்து மூன்று அடி உயரத்துக்கு சுண்ணாம்பு பூசினால் கரையான் பாதிப்பை நிரந்தரமாக தடுக்க முடியும் என தெரிவித்தார்.
Share your comments