1. விவசாய தகவல்கள்

PM Kisan Scheme | பிஎம் கிசான் அடுத்த தவனை எப்போது தெரியுமா? மொபைல், ஆதார் எண் எல்லாம் அப்டேட் பண்ணிட்டீங்களா?

Daisy Rose Mary
Daisy Rose Mary

நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் "பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம்"(PM Kisan). இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரையில் நிதி உதவி வழங்கப்படுகிறது.

PM Kisan திட்டத்தின் கீழ் ரூ.2000 வீதம் 3 தவணைகளாக மொத்தம் 6000 ரூபாய்  தொகை செலுத்தப்படுகிறது. PM கிசான் திட்டத்தின் கீழ் ஏராளமான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் ஆதார் எண்ணை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம். 

PM கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகள் Direct Benefit Transfer (DBT) மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 பெறுகின்றனர். இந்தத் தொகை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என்ற வீதத்தில் 3 தவணைகளில் பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கடைசி தவணை வரும் நவம்பர் மாதம் வழங்கப்பட உள்ளது. 

மொபைல் எண் & ஆதார் எண் அப்டேட் செய்வது முக்கியம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டது. எனவே எந்த ஒரு தகவலானாலும் சரி உங்களுடைய மொபைல் நம்பருக்கு தான் குறுச்செய்தியாக  அனுப்பப்படுகிறது. எனவே எப்போதும் மொபைல் எண்ணை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது முக்கியம். மேலும் PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது பயன்படுத்திய இணையதளத்திலேயே உங்கள் போன் நம்பர் புதிதாக மாற்றி இருந்தால் அப்டேட் செய்து கொள்ளலாம்.

மொபைல் நம்பரை அப்டேட் செய்வது?:

ஸ்டெப் 1: அதற்கு முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

ஸ்டெப் 2: ஹோம் பேஜில் உள்ள "Farmers Corner" என்ற பகுதியைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: அதன் பின் "Update Mobile Number" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: உங்கள் பதிவு எண் அல்லது ஆதார் எண்ணை வழங்கவும். உங்களிடம் ஆதார் எண் இல்லையென்றால், உங்கள் PM கிசான் பதிவு எண்ணைப் பயன்படுத்தி உங்கள் விவரங்களை update செய்து கொள்ளலாம்.

ஸ்டெப் 5: உங்கள் புதிய மொபைல் நம்பரை என்டர் செய்து, கேப்ட்சாவை கொடுத்து, "Search" என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர், உங்கள் நம்பரை அப்டேட் செய்ய, "Edit" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அதுவே "No record found" என்று காட்டினால், உங்கள் மொபைல் நம்பரை மாற்ற இம்முறையைப் பின்பற்றவும்.

உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை வேறு ஒரு புதிய நம்பர் மூலம் மாற்ற விரும்பினால் கீழ்காணும் முறையில் மாற்றலாம்.

ஸ்டெப் 1: முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்லவும். பின்னர் "Beneficiary Status" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 2: இப்போது "know your registration number" என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: இப்போது, ​​அந்தப் பக்கத்திலிருந்து பதிவு எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் முந்தைய பக்கத்திற்குச் சென்று, உங்கள் பதிவு எண் மற்றும் படக் குறியீட்டை என்டர் செய்து, "Get data" பட்டனைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 4: இந்தப் பக்கத்தில், உங்கள் மொபைல் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்களைக் காண்பீர்கள். இப்போது உங்கள் மொபைல் எண்ணை மாற்ற மேலே கூறப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்-ஐ பின்பற்றவும்

பிஎம் கிசான் திட்டத்தில் கொடுத்த ஆதார் எண்ணில் அப்டேட் செய்ய கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்

ஸ்டெப் 1 ; ஸ்டெப் 1: முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்லவும். பின்னர் "Farmers Corner" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 2 ; பின்னர் Edit aadhaar failure records” என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3 ; பின்னர் திறக்கும் புதிய பக்க்கத்தில் உங்கள் ஆதார் எண் காண்பிக்கப்படும். அதனை எடிட் செய்து அப்டேட் செய்யவும்.

Read more 

Kisan Ki Baat - விவசாயிகளுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட ஒன்றிய அமைச்சர்!

உள்ளூா் பாரம்பரியப் பயிா் உற்பத்தி அதிகரிப்பு அவசியம்! - பயிர் பாதுகாப்புதுறை வலியுறுத்தல்!

 

English Summary: Do you know when next installment of PM Kisan? Have you updated your mobile and Aadhaar numbers? Published on: 27 August 2024, 05:00 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.