இராஜபாளையம் அருகே தேவதானம் சுற்றுப் பகுதிகளில் நெல் சாகுபடியில் ஆள் பற்றாக்குறை, பராமரிப்பு செலவை சமாளிக்க 'டிரம் சீட்' எனும் வேளாண் கருவி மூலம் நடவு பணி நடந்து வருகிறது. இராஜபாளையம் அடுத்த சேத்துார், தேவதானம் பகுதி நீர் தேக்கங்கள், கண்மாய்கள் பருவ மழையால் பெருகியதால் இந்தாண்டு நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. நெல் பயிரிடும் போது நிலத்தை தயார்படுத்துவது துவங்கி அறுவடை வரை ஆட்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். ஒரே சமயத்தில் இப்பணிகள் துவங் குவதால் ஆட்கள் பற்றாக் குறை, கூலி உயர்வு போன்ற பிரச்னைகளை விவசாயிகள் எதிர் கொள்கின்றனர்.
நெல் நடவு (Paddy Planting)
நெல் நாற்றுகளை தகுந்த பருவத்தில் நடவு செய்தால் தான் அவை குறிப்பிட்ட காலத்துக்குள் நன்கு வளர்ந்து அதிக மகசூலை தரும். ஆட்கள் பற்றாக்குறையால் சரியான காலத்தில் நாற்றுகளை நட முடிவதில்லை. இதற்கு மாற்றாக நேரடி விதைப்பு கருவியான 'ட்ரம் சீட்' எனும் உருளை வடிவ நெல் விதைப்புக் கருவியை தேவதானம் பகுதி விவசாயிகள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
இதனால் பயிர்கள் இடையே சீரான இடை வெளி கிடைப்பதுடன் நடவு பணிகளுக்கான செலவும் மிச்சமாகிறது. விவசாய பணிகளுக்கு இது போன்ற நவீன பாசன கருவிகளை பயன்படுத்த வேளாண் பொறியியல் துறையினர் ஊக்குவிக்க வேண்டும்.
மானியம் வேண்டும் (Need Subsidy)
தவசி, விவசாயி, தேவதானம்: ஆள் பற்றாக் குறையை சமாளிக்க நவீன முறையில் 'டிரம் சீட்' மூலம் நடவு செய்வதால் செலவு குறைவதுடன் விதையும் பாதி அளவு மட்டுமே தேவைப்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பாசன நிலங்களுக்கு பயன்படும் வகையில் விவசாயிகளுக்கு இக்கருவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மானிய விலையில் வழங்க வேளாண்துறை முன்வர வேண்டும், என்றார்.
மேலும் படிக்க
அங்கக பயிர் மேலாண்மையில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நுட்பங்கள்!
Share your comments