மத்திய அரசின் இ-நாம் சந்தை ஆப்பில் வரும் நிதியாண்டில் மேலும் கூடுதலாக 1000 சந்தைகள் இணைக்கப்படும் என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாடு ஒரே சந்தை (இ-நாம் - e-Nam)
வேளாண் விளைப் பொருட்கள் சந்தப்படுத்தும் முறைகளை எளிமையாக்க மத்திய அரசு பல்வேறு ஆலோசனைகளையும் திட்டங்களையும் முறைப்படுத்தி வருகிறது. அதன்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த இ-நாம் ஆப். பல்வேறு சந்தைகள் மற்றும் விளைப் பொருட்களை வாங்குவோர்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகள் சென்றடைவதற்காக தொடங்கப்பட்ட இ-நாம் என்றழைக்கப்படும் தேசிய வேளாண் சந்தை “ஒரே நாடு, ஒரே சந்தை” என்னும் லட்சியத்தை அடைவதற்கு உதவி வருகிறது.
வெளிப்படையான ஏல முறை
18 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 1000 சந்தைகள் இது வரை இ-நாமில் இணைக்கப்பட்டுள்ளன. 1.69 கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், 1.55 லட்சம் வர்த்தகர்களும் இதில் இணைந்துள்ளனர். வெளிப்படையான ஆன்லைன் ஏல முறையின் மூலம் ரூ 1.22 லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் பொருட்கள் விற்கப்பட்டு, அதற்கான கட்டணங்கள் நேரடியாக விவசாயிகளை சென்றடைந்துள்ளது.
மேலும் 1000 சந்தைகள் இணைப்பு
இ-நாம் முறையின் வெற்றியை தொடர்ந்து, 2021 பிப்ரவரி 1 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தவாறு, இன்னும் 1000 மண்டிகள் (சந்தைகள்) இ-நாமில் இணைக்கப்படும். கோவிட்-19 காலகட்டத்தின் போது, விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான விற்பனை வசதியும் இ-நாம் தளம்/செயலியில் தொடங்கப்பட்டதன் மூலம், 1844 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் இதுவரை இணைந்துள்ளன.
இ-நாம் முறை வெறும் திட்டமாக மட்டுமேயில்லாமல், கடைகோடி விவசாயிக்கும் நன்மை பயக்கும் விதமாக உருவெடுத்துள்ளது. தங்களது வேளாண் பொருட்களை விவசாயிகள் விற்கும் முறையையே இது மாற்றியமைத்துள்ளது.
மேலும் படிக்க...
ரூ.12,000 கோடி விவசாயப் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்தது தமிழக அரசு
முள்ளங்கி சாகுபடியில் கூடுதல் வருமானம் ஈட்ட சிம்பிள் டிப்ஸ்!
Share your comments